காய்கறிப் பயிர்களைப் பொருத்தவரை, விதை உற்பத்தியின் போது நாம் எவ்வாறு நாம் கவனம் செலுத்துகிறோமோ அதே போன்று சரியான நேரத்தில் அறுவடை செய்வதிலும் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.
நல்லத் தரமான விதைகள்தான் நல்ல மகசூலை அளிக்க வல்லது. எனவே, விதையை விதைப்பதற்கு முன்பு அதன் தரத்தை பரிசோதித்து அறிந்துகொள்வது மிக மிக இன்றியமையாதது.
அந்தவகையில் காய்கறிப் பயிர்களை எப்போது அறுவடை செய்தால், நல்லத் தரமான விதைகளைப் பெறமுடியும் என்பதைப் பார்ப்போம்.
நிறம் மாறும் அறிகுறிகள் (Signs of color change)
காய்கறி பயிர்களில் பயிர் வினயியல் முதிர்ச்சி தருணத்தில் நிறம் மாறும் அறிகுறிகளை வைத்து நாம் அறுவடை செய்யலாம். அப்பொழுது நமக்கு நல்ல திறட்சியான, அதிக முளைப்புத் திறன் மற்றும் வீரியமுள்ள விதைகள் கிடைக்கும்.
மிளகாய் (Chilly)
மிளகாய்கள் பச்சை நிறத்தில் இருந்து சிவப்பு நிறமாக மாறி இருக்க வேண்டும். இந்த தருணத்தில் அறுவடை செய்வது சிறந்தது.
கத்திரிக்காய் (Brinjal)
கத்திரிக்காய் பச்சை, ஊதா அல்லது வெள்ளை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறி இருக்க வேண்டும். அவ்வாறு மாறும்போது அறுவடை செய்தால், சிறந்த முளைப்புத்திறன் கொண்ட விதைகளைப் பெற முடியும்.
தக்காளி (Tomato)
தக்காளிப் பழங்கள் பச்சை நிறத்தில் இருந்து சிவப்பு நிறமாகவும், பழங்கள் மென்மையாகவும் இருக்க வேண்டியது அவசியம். இந்த சமயத்தில் தக்காளிப்பழங்களை அறுவடை செய்வதன் மூலம் வீரியமுள்ள விதைகளைப் பெற முடியும்.
வெண்டைக்காய் (Ladies finger)
வெண்டைக்காய்கள் பச்சை நிறத்தில் இருந்து வெளிறிய பழுப்பு நிறமாக மாறி இருக்க வேண்டும். மேலும் காய்களின் முகடுகளில் மயிரிழைக் கோடு விரிசல்கள் காணப்படும் போது அறுவடை செய்ய வேண்டும். இந்த சமயத்தில், வெண்டைக்காய்களை அறுவடை செய்தால், அதிக மகசூல் கொடுக்கக்கூடிய முளைப்புத்திறன் கொண்ட விதைகளைப் பெற இயலும்.
கூடுதல் விவரங்களுக்கு
அருப்புக்கோட்டைவேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியர்களான முனைவர்.உ.வேணுதேவன், முனைவர்.ஜெ.ராம்குமார் முனைவர்.சி.ராஜபாபு மற்றும் கோமுனைவர்.ஸ்ரீனிவாசன், திட்ட ஒருங்கிணைப்பாளர், ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
வறட்சிகாலத்தில் பயிருக்கு உயிரூட்டும் திரவ நுண்ணுயிர் உரங்கள்!!
மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து வேளாண் அலுவலர் விளக்கம்!
மதுரையில் தரிசாகும் விவசாய நிலங்கள்! பயிருக்கு விலையும் இல்லை! களையெடுக்க ஆளிமில்லை!
Share your comments