விளைநிலத்தை நோய்கள் உள்ளிட்ட பல்வேறு எதிரிகளிடம் இருந்து காக்கும் பாதுகாக்கும் அரணாக இருப்பது வேலி ஓர மரங்கள்தான்.
பாதுகாப்பு அரண் (Bulwark)
ஏனெனில் இவைதான், முதலில் எதிரிகளின் தாக்குதலை எதிர்கொள்வதோடு, அவற்றை துவம்சம் செய்யும் வல்லமையையும் படைத்தவையாக இருக்கும்.
ஆக விவசாயம் செய்யும் விளைநிலங்களில், வேலி ஓரங்களில் நடப்படும் மரக்கன்றுகள் மிக மிக முக்கியமானவை. அவற்றை எவ்வாறு தேர்வு செய்வது, எந்தெந்த மரக்கன்றுகளை நடவு செய்யலாம், அவற்றிற்கு ஏற்ற மண் எவை? ஆகியவை குறித்து பார்ப்போம். வேலி ஓரங்களில் மரக்கன்று நடுவதற்க்கு முன் மண் அமைப்பை பார்க்க வேண்டியதும் அஇவசியம்.
நடப்படும் மரங்கள் (Planted trees)
செம்மரம், சந்தன மரம், தேக்கு, குமிழ், பெருமரம் , கரு மருது, நீர் மருது மற்றும் கருங்காலி இதெல்லாம் பொதுவாக நடக்கூடிய மரங்கள் .
ஒரே வகை மரங்கள் (The same type of trees)
இதை தவிர்த்து ஒரே வகை மரங்கள் நடலாம் என்றால் மலை வேம்பு , ஆச்சா மற்றும் சவுக்கு மரங்கள் நடலாம். இவை எல்லாமே வேலிக்காக நடப்படும் பிரத்யேக மரங்கள் வகையைச் சேர்ந்தவை.
அதேநேரத்தில் இடத்தை பொறுத்தும், அந்த சூழ்நிலையை பொறுத்தும் மரக்கன்றுகளை நடவு செய்யலாம். நிலத்தைப் பாதுகாக்கும் அரண் என்றால், சந்தனமரம், செம்மரம் மாதிரி உயர் ரக மரங்களை வைக்கலாம் . இல்லையென்றால் இது இரண்டும் தவிர்த்து, மற்ற மரங்களையும் வைக்கலாம்.
களிமண் நிலம் (Clay land)
களிமண்ணாக இருந்தால் அல்லது கொஞ்சம் உப்புத்தன்மை அதிகம் உள்ள நிலமாக இருந்தால் கரு மருது மற்றும் கருங்காலி மரத்தை தவிர்த்து மற்ற மரங்களை நடவு செய்லாம் . இந்த களிமண் நிலத்தில் பூவரசு நன்றாக வரும்.
தேக்கு சிறந்தது. எனினும் தேக்கு என்பத தற்போது விலை அதிகம் உள்ள மரணம் என்பது இதன் பாதக அம்சம். அதேநேரத்தில், கொஞ்சம் மெதுவாக வளரும் நல்ல விலை மதிப்புடையது.
இதற்கு அடுத்தபடியாக அடுத்து வேம்பு. இதுவும் வீடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய மரம்தான். எனவே வேப்பங்கன்றையும் வேலி ஓரங்களில் நடலாம்.
மேலும் படிக்க...
பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க- ரூ.82,000 வரை மானியம்!
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மகனுக்கு அறிவுறுத்துங்கள்- மோடியின் தாயாருக்கு விவசாயி கடிதம்!
ரிசர்வ் வங்கி ஊழியராக விருப்பமா? கல்வித்தகுதி 10ம் வகுப்பு- உடனே விண்ணப்பியுங்கள்!
Share your comments