விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண்ணைப் பரிசோதனை செய்து, அதற்கு ஏற்ப உரங்களைப் பயன்படுத்துவது, நல்ல மகசூல் பெற வழிவகுக்கும் என வேளாண்மை இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
உரச் செலவு
விருதுநகர் மாவட்ட விவசாயிகள் தங்கள் வயலில் மண் பரிசோதனை செய்து மண் வள அட்டை பெற்று, அதற் கேற்றவாறு உர பரிந்துரைப்படி உரமிட வேண்டும். இதனால் தேவையற்ற உரச் செலவு தடுக்கப்படுகிறது.
மண் வளம்
தேவையற்ற உரங்கள் அதிகளவில் இடுவதால் மண்ணின் வளம் கெடுகிறது. அதிகப்படியான ரசாயனங்கள் மண்ணில் சேர்க்கப்படுவதால் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழிந்து விடுகின்றன. இதனால் மண்ணிலுள்ள சத்துக்களை பயிர்கள் எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகின்றது. மண்ணின் காரத்தன்மை அல்லது அமிலத்தன்மை அதிகமாகிறது. தேவையற்ற உரம் இடுவதால் பயிர்கள் சாய்வதற்கு காரணமாக உள்ளது.
மக்கிய உரம்
எனவே விவசாயிகள் மக்கிய தொழு உரம், உயிர் உரங்கள் அதிக அளவு பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது. உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் காற்றிலுள்ள தழைச்சத்தை பயிருக்கு கொடுக்கின்றது.
பாஸ்போபாக்டீரியா மண்ணிலுள்ள மணிச் சத்தையும், திரவ பொட்டாஷ் மண்ணிலுள்ள சாம்பல் சத்தையும் கரைத்து பயிருக்கு கொடுக்கின்றது.
இவற்றை பயன்படுத்துவதால் உர சாம்பல் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.
பச்சை நிறம்
பயிரின் நிறம் அதிக பச்சை நிறமாக இருப்பின் தீங்கு செய்யும் பூச்சிகள் அதிக அளவு பயிரை தாக்கி முட்டைகளை இட்டு சேதப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.
எனவே, விவசாயிகள் தேவையற்ற உரங்களை இடுவதை தவிர்க்க வேண்டும்.
கால சூழ்நிலைக்கேற்ப பூச்சி நோய் அறிகுறிகள் தென் பட்டால் உடன் தங்கள் பகுதி வேளாண் விரிவாக்க மையத்தை அணுகிடலாம்.
தகவல்
ச.உத்தண்டராமன்
வேளாண்மை இணை இயக்குநர்
விருதுநகர் மாவட்டம்
மேலும் படிக்க...
Share your comments