இந்திய உழவர் உரக்கூட்டுறவு (இப்கோ) நிறுவனத்தின் சார்பில் திரவ வடிவலான நானோ யூரியா உரம் ஈரோடுமாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நானோ யூரியா (Nano urea)
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த எண்ணமங்கலத்தில், நானோத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட உலகின் முதல் நானோ யூரியாவை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் புதிய வகை யூரியாவை அறிமுகம் செய்துவைத்து, மக்காச்சோள வயலில் செயல்விளக்கத்தைப் ஈரோடு வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனமான இப்கோ மூலம் நானோ தொழில்நுட்பத்தில் உலகின் முதல் நானோ உரமான நானோ யூரியா தயாரிக்கப்பட்டுள்ளது.
500 மில்லி திரவம் (500 ml of fluid)
யூரியா உரத்திற்கு மாற்றாக இந்த நானோ யூரியாவைப் பயன்படுத்தலாம். இதில் சிறப்பு என்னவென்றால் ஒரு மூட்டை (45 கிலோ) யூரியாவுக்குப் பதிலாக ரூ.240/- விலை கொண்ட வெறும் 500 மில்லி லிட்டர் திரவமே போதுமானது.
தழைச்சத்து (Nutrient)
அனைத்து வகையான பயிர்களுக்கும், யூரியா மேல் உரமிடுவதற்கு மாற்றாக இந்த திரவவடிவ நானோ யூரியாவை இலை மீது தெளிக்கலாம். இத்திரவம் இலை முதல் வேர் வரையிலும் சென்று பயிர்களுக்கு தழைச்சத்தை அளிக்கிறது.
அதிக மகசூல் (High yield)
ஒரு லிட்டர் தண்ணீரில் 4 மில்லி லிட்டர் நானோ யூரியா கலந்து தெளித்தால் போதுமானது. இதனால் மண் மற்றும் நீர் மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பு அளிப்பதுடன் அதிக மகசூலும் கிடைக்க வழிவகைக்கிறது.
240 லிட்டர் (240 liters)
ஈரோடு மாவட்டத்திற்கு முதல் தவணையாக யூரியா 240 லிட்டர் நானோ யூரியா வரப்பெற்று உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இப்கோ (Ipco)
இந்த செயல்விளக்க நிகழ்ச்சியில் ' இப்கோ ' கள அலுவலர் வினோத், அந்தியூர் வேளாண்மை உதவி இயக்குநர் கார்த்திகேயன், வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு எம்.தமிழ்செல்வன், அந்தியூர் வேளாண்மை அலுவலர் ஜெயக்குமார், 'அட்மா' திட்ட அந்தியூர் வட்டார தலைவர் கிருஷ்ணமூர்த்தி மைராடா ' வேளாண் அறிவியல் நிலைய யூச்சியியல் வல்லுநர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொதுவாக பயிர்களுக்கு பயன்படுத்தும் யூரியாவிற்கு மாற்றாக இந்த திரவ யூரியாவைப் பயன்படுத்தி விவசாயிகள் பயனடையலாம்.
மேலும் படிக்க...
PMKMY-விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியத் திட்டம் - உங்கள் பெயரைப் பதிவு செய்வது எப்படி?
PMJDY: பல்வேறு நன்மைகளுடன் ரூ. 2 லட்சம் காப்பீடு தரும் ஜன் தன் கணக்கு திட்டம்!!
Share your comments