வாழையில் ஊடுபயிராக காய்கறிகள் வளர்த்து நல்ல மகசூல் பெறலாம். ஆனால் அதே நேரம் விவசாயிகள் பந்தல் காய்கறிகளை தேர்வு செய்யாதீர்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது.
அதே நேரம், தோட்டக்கலைத் துறை சார்பாக, ஊடுபயிராக காய்கறிகளை வளர்க்க மானியமாக எக்டருக்கு ரூ.10,000/- நடவுப்பொருட்கள், இடுபொருட்கள் மற்றும் இதர பயிர் சாகுபடி நடைமுறைகளுக்கு வழங்கப்படுகிறது.
அடுத்ததாக, தென்னையில் ஊடுபயிராக வாழையை தேர்வு செய்யலாம். இரட்டிப்பு லாபம் பெற வாழை நல்ல தேர்வு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரம் இதற்கும் அரசு வழங்கும் மானியம் உள்ளது. எனவே அதனை அறிந்து பயன்பெறுங்கள்.
தென்னையில் ஊடுபயிராக வாழைக்கு மானியமாக எக்டருக்கு ரூ.26,250/- நடவுப்பொருட்கள், இடுபொருட்கள் மற்றும் இதர பயிர் சாகுபடி நடைமுறைகளுக்கு தோட்டக்கலைத் துறை சார்பாக வழங்கப்படுகிறது.
இவ்விரண்டு திட்டத்திலும், ஊடுபயிர்களுக்கு விவசாயிகள் அதிகபட்சமாக 2 எக்டர் வரை பயன் பெறலாம்.
ஊடுபயிரின் சாகுபடியின் பயன்கள்:
- கூடுதல் வருமானம்
- நிலத்தை திறம்பட பயன்படுத்தல்
- மண் அரிப்பை தடுத்தல்
- மேம்படுத்தப்பட்ட களை மேலாண்மை
- பிரதான பயிர்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து
தமிழ்நாட்டில் அதிக அளவில் வாழை மற்றும் தென்னை தோப்புகள் உள்ளன. ஆனால் இப்பயிர்கள் உடனடி பயன்தாராத பயிர்களாகும். இதற்கான காலமும் அதிகமாகும். அந்த வகையில், ஊடுபயிர்கள் நிரந்தர வருமானம் தரக்கூடியவை ஆகும். எனவே, விவசாயிகள் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
அடுத்ததாக குருணை ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு: ஏன்?
12-ந்தேதி முதல் கால்நடை மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
Share your comments