Credit : Times of india
நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுடைய சிறுவர்- சிறுமிகளுக்கு கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதனால், 7-வது முறையாக மீண்டும் ஒரே நாளில் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொடூரக் கொரோனா (Cruel corona)
உலக நாடுகளை உலுக்கி எடுத்தப் கொரோனா வைரஸ், இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளவதற்காக, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நம் நாட்டில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.
கொரோனாத் தடுப்பூசி (Corona vaccine)
தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜன., 16ல் துவங்கியது. முதல் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின், 45 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் 18 வயது நிரம்பியோர் என தடுப்பூசி பணிகள் அடுத்தடுத்த கட்டங்களை எட்டியது. கடந்த ஆண்டு ஆகஸ்ட், 27, 31 செப்டம்பர் 6, 27 மற்றும் டிசம்பர் 4 தேதிகளில் ஒரே நாளில் செலுத்திய தடுப்பூசி 'டோஸ்' எண்ணிக்கை ஒரு கோடியை கடந்தது.
இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதி 2.5 கோடிக்கும் அதிகமான டோஸ் செலுத்தப்பட்டன. இதற்கிடையே உருமாற்றம் அடைந்த 'ஒமிக்ரான்' வைரஸ் தற்போது உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து நம் நாட்டில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ளோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று துவங்கியது.
146.68 கோடி (146.68 crore)
இதனால் ஒரே நாளில் செலுத்திய டோஸ் எண்ணிக்கை ஏழாவது முறையாக நேற்று ஒரு கோடியைக் கடந்தது. இதன் வாயிலாக இதுவரை செலுத்திய ஒட்டுமொத்த டோஸ் எண்ணிக்கை 146.68 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
மேலும் படிக்க...
Share your comments