கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் பேருந்துகள் உள்ளிட்டவற்றில் தற்போது 10 ரூபாய் நாணயங்களை வாங்க முனைப்பு காட்டப்படுவதில்லை. இதனால் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற எண்ணம் மக்கள் மனதில் பதிந்துள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.
இதன் காரணமாக, 10ரூபாய் நாணயத்தை வைத்துக்கொள்ளலாமா, செல்லுமா? செல்லாதா? என்ற குழப்பம் நீடிக்கிறது. இந்தக் குழப்பத்தில் இருந்து வாடிக்கையாளர்களை விடுவிக்கும் வகையில், தனியார் ஓட்டல் ஒன்று கவர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
10% சலுகை (10% Offer)
அதன்படி, இந்த ஓட்டலில் உணவு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் தங்களது முழு பில் தொகையையும் 10 ரூபாய் நாணயங்களாக செலுத்தினால் மொத்த கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் அதன் உரிமையாளர் கிருஷ்ண ராஜ்.
இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஏராளமானோர் 10 ரூபாய் நாணயங்களுடன் உணவகத்திற்கு படையெடுத்து வருவதைக் காண முடிகிறது.
இதுபற்றி பேசிய உணவக உரிமையாளர் கிருஷ்ண ராஜ், 10 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதில் ரிசர்வ் வங்கி மிகவும் பொறுமையாக செயல்பட்டு வருகிறது. அதேசமயம் பெரும்பாலான வியாபாரங்களில் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இதனைக் கருத்தில்கொண்டு இந்த நாணயங்களுக்கான சிறப்பு சலுகையை அறிவித்துள்ளோம்.
பெங்களூருவில் நடுத்தரமான உணவகம் ஒன்றில் சராசரியாக 50 ஆயிரம் எண்ணிக்கையிலான ரூபாய் நோட்டுகள் அல்லது 10 ரூபாய் நாணயங்கள் தேவைப்படுகின்றன. எனவே நாணயங்களில் ஏற்படும் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் இப்படியொரு விஷயத்தை முன்னெடுத்துள்ளோம் என்றார்.
10 ரூபாய் நாணயத்தை வாங்கும் ஓட்டல் தமிழ்நாட்டில் இல்லை,கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ருபதங்கா சாலையின் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் உள்ளது இந்த நிசர்கா கிராண்ட் உணவகம்.
மேலும் படிக்க...
ஆவின் நிறுவனத்தில் வேலை- ரூ.50,000 வரை ஊதியம்!
அழகுக்கும் கழுதைக்கும் ஆயிரம் சம்மந்தம் - தெரியுமா உங்களுக்கு!
80% அரசு மானியத்தில் அசத்தல் வியாபாரம்- முழு விபரம் உள்ளே!
Share your comments