கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த 10 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
35 ஆயிரம் வரை (Up to 35 thousand)
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரம் வரை சென்றது. இதையடுத்துக் கொரோனாப் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
ரயில்கள் ரத்து (Trains canceled)
அனைவருக்குத் தடுப்பூசி, ஞாயிறு ஊரடங்கு, இரவு முழு ஊரடங்கு, தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. இதன் காரணமாக 10 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
பாதிப்பு குறைந்தது (The impact is minimal)
முழு ஊரடங்கு கடைப்பிடிப்பு காரணமாக, தற்போது தொற்று பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
கட்டுப்பாடுகள் தளர்வு (Relaxation of controls)
30 ஆயிரத்திற்கும் மேல் இருந்து தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 8 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதையடுத்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசுப் படிப்படியாகத் தளர்த்தி வருகிறது.
பொது போக்குரத்து (Public transport)
வரும் திங்கட்கிழமை முதல் மேலும் தளர்வுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாகத் தொற்று குறைவாக இருக்கும் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது.
மின்சார சேவை அதிகரிப்பு (Increase in electricity service)
முதற்கட்டமாக 50 சதவீத பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா அதிகரித்தபோது பயணிகள் வருகை குறைந்ததால் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் நாளை முதல் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுத் தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மீண்டும் இயக்கம் (Re-movement)
பயணிகள் வரத்து குறைவால் ரத்து செய்யப்பட்ட கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகிறது.
நாளை முதல் இயக்கம் (Run from tomorrow)
-
சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் (வண்டி எண்: 06865)
-
எழும்பூர்-கொல்லம் (06101)
-
சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-திருவனந்தபுரம் (02695)
-
எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-ஆலப்புழா (02639)
-
எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-மேட்டுப்பாளையம் (02671)
-
எழும்பூர்-ராமேஸ்வரம் (06851)
-
கோவை-நாகர்கோவில் (02668, திருவனந்தபுரம்-மதுரை (0634)
-
மதுரை-புனலூர் (06729)
-
திருச்சி-எழும்பூர் (02654)
ஆகிய தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் 20-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
21ம் தேதி முதல் இயக்கம் (Run from 21st)
-
தஞ்சாவூர்-எழும்பூர் (06866)
-
கொல்லம்-எழும்பூர் (06102)
-
திருவனந்தபுரம்-எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (02696)
-
ஆலப்புழா-எம்.ஜி.ஆர் சென்ட்ரல் (02640)
-
மேட்டுப்பாளையம்-எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (02672)
-
ராமேஸ்வரம்-எழும்பூர் (06852)
-
நாகர்கோவில்-கோவை (02667)
-
மதுரை-திருவனந்தபுரம் (06344)
-
புனலூர்-மதுரை (06730)
-
எழும்பூர்-திருச்சி (02653)
ஆகிய தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் 21-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
தொழில்துறையை மேம்படுத்த சிறப்பு கடன்! கொரோனா ஊரடங்கால் பாதித்தோருக்கு உதவி
பிரதமரை சந்தித்து 30 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்!
Share your comments