1. செய்திகள்

வெறும் ரூ.399க்கு 10 லட்சம், என்ன திட்டம் தெரியுமா?

T. Vigneshwaran
T. Vigneshwaran
Investments

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் சாமானிய மக்களுக்கும் விபத்து காப்பீட்டின் சலுகைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் பலருக்கும் இதுகுறித்த தெளிவான விவரங்கள் கிடைக்கப்படாமல் உள்ளன.

அதனால் மிடில் கிளாஸ் மக்கள் அனைவருக்கும் இந்த திட்டத்தின் பயன் இன்றுவரை முழுமையாக சென்று சேரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசு முடிந்த வரை இந்த இன்சூரன்ஸ் திட்டம் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்க பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி மக்களுக்கு அனைத்து விதமான நிதி சேவைகளையும் வழங்குகிறது. சேமிப்பு கணக்கு தொடங்கி அனைத்து விதமான நிதி சார்ந்த வசதிகளும் இந்த வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லை மூத்த குடிமக்களுக்கு ஹோம் சர்வீஸ் வசதியும் உண்டு.அந்த வகையில் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, டாடா ஏஐஜி பொது காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து, ஆண்டுக்கு ரூ.399 பிரீமியத்தில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு வெறும் ரூ.399 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டை பெறலாம். 18 முதல் 65வயது வரை உள்ளவர்கள் இதில் சேரலாம். விரல் ரேகை மூலம் 5 நிமிடங்களில் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது.

இந்த காப்பீட்டின் மூலம் விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம் ஆகியவற்றுக்கு இழப்பீடு பெற முடியும். பொதுமக்கள் மிக எளிதான முறையில் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம் என அஞ்சல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனிலும் இதுக் குறித்து தெரிந்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க:

தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜன் சதய விழா

மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம்

English Summary: 10 lakhs for just Rs.399, do you know what the plan is? Published on: 27 October 2022, 06:52 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.