இந்திய இரயில்வேயில் மிக மிகு குறைந்த வயதில் வேலை பெறும் நபராக, 10 மாத குழந்தை ராதிகா உள்ளார். சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திரகுமார் என்பவர் விலாய் பகுதியில் ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் வாகன விபத்தில் ராஜேந்திரகுமாரும், அவரது மனைவியும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இவர்களது 10 மாத குழந்தை ராதிகா யாதவ் உயிர் பிழைத்தது.
இரயில்வே வேலை (Railway Job)
இரயில்வே விதிகளின் படி, ராஜேந்திரகுமாரின் குடும்பத்திற்கு ராய்ப்பூர் ரயில்வே கோட்டம், அனைத்து உதவிகளையும் செய்தது. தற்போது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வரும் 10 மாத குழந்தையான ராதிகா யாதவுக்கு தன் தந்தையின் பணி வழங்கப்பட்டு உள்ளது. சிறிய குழந்தை என்பதால், அதன் கைரேகையை பதிவு செய்து பணி நியமனம் உறுதிபடுத்தப்பட்டது.
குழந்தை 18 வயதை பூர்த்தி செய்ததும், சுய விருப்பத்தின் அடிப்படையில் பணிக்கு சேரலாம் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்திய வரலாற்றிலேயே மிக மிக குறைந்த வயதில், அரசு வேலை பெறும் குழந்தை ராதிகா தான். அதுவும், இன்னமும் 1 வயது கூட நிரம்பாத நிலையில், குழந்தைக்கு இரயில்வே விதிகளின் படி வேலை தரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
பழைய பென்சன் திட்டத்தில் அப்படி என்ன தான் இருக்கு: இதோ அதன் சிறப்பம்சங்கள்!
வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை: விரைந்து விண்ணப்பிக்கவும்!
Share your comments