1. செய்திகள்

பேருந்தில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 10% தள்ளுபடி: சூப்பர் ஆஃபர்!

R. Balakrishnan
R. Balakrishnan
Bus

தமிழகத்தில் 300 கிலோ மீட்டருக்கு அதிக தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வசதி கடந்த 2006 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட்டை முன் பதிவு செய்து கொள்ளும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது.

பேருந்து பயணம் (Bus Travel)

அரசு விரைவு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்பவர்களுக்கு இணையதளம் மூலம் முன் பதிவு செய்தால் திரும்பி வரும் டிக்கெட் கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து அமைச்சர் சிவசங்கர் சட்டசபையில் அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த திட்டமானது அமலுக்கு வர உள்ளது.

10% தள்ளுபடி (10% Offer)

அதாவது பயணிகள் நீண்ட தூரம் பஸ்களில் பயணம் செய்வதை ஊக்குவிக்கவும், தனியார் ஆம்னி பஸ்கள் மற்றும் ரயில்களில் பயணம் செய்பவர்களை தங்கள் பக்கம் இழுக்கவும், இணையதளம் மூலமாக இருவருக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சலுகை, விழா காலங்களில் பொருந்தாது என்றும் இதர நாட்களில் வழக்கம் போல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

தமிழக மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்: நாளை முதல் தொடக்கம்!

ரயில்களை போல பேருந்துகளில் புதிய வசதி: விரைவில் அறிமுகம்.!

English Summary: 10% Offer on Bus Ticket Booking: Super Offer! Published on: 05 September 2022, 08:09 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.