மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MNREGA) என்பது இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் உத்தரவாதத்தை வழங்குகிறது. இது 100 நாள் வேலைத் திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பொது வேலை செய்ய விருப்பமுள்ள கிராமப்புற வயதுவந்த நபர்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.5 லட்சம் கோடி செலவிட்டுள்ளது. இதில், 20 சதவீதம் கொரோனா தொற்றுநோய் காலத்தில் செலவிடப்பட்டதாகும். தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கடந்த 8 ஆண்டுகளில் 20 ஆயிரம் கோடி ரூபாய் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், "கடந்த எட்டு ஆண்டுகளில் MGNREGA திட்டத்தின் கீழ் தெலுங்கானாவுக்கு ரூ.20,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் நாடு முழுவதும் ஐந்து லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அதில் 2020-21ஆம் ஆண்டில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக செலவிடப்பட்டது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பணம் சரியாக செலவழிக்கப்படவில்லை என்ற புகார்கள் வந்தாலோ அல்லது தணிக்கை அறிக்கையில் ஏதேனும் கருத்து இருந்தாலோ, கணக்கெடுப்பு குழுக்கள் வரும்.
திட்டத்தை முடக்குவதற்கு ஆய்வுக் குழுக்கள் அனுப்பப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், அவற்றைச் சரிசெய்வதற்காக ஆய்வுக் குழுக்கள் அனுப்பப்படும் என்றார். மேலும் பேசிய அவர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இத்திட்டத்தில் பல குறைபாடுகள் இருந்ததாகவும், அவை பிரதமர் நரேந்திர மோடியின் அரசால் நீக்கப்பட்டு, தற்போது நேரடி பலன் பரிமாற்றம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க
இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அறிவிப்பு
Share your comments