தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் 15 முதல் 18 வயதுள்ள சிறார்கள் 100 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு தடுப்பூசி (Vaccine for Students)
நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு கடந்த 3ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
100% தடுப்பூசி (100% Vaccine)
இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் 15 முதல் 18 வயதுள்ள அனைத்து சிறார்களுக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 76 சதவீதம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைவாக பதிவாகி வருகிறது.
எனினும் பொங்கல் விடுமுறை முடிந்துள்ளதால் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் முகக் கவசத்தை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகிறேன் விடுத்துள்ளார்.
மேலும் படிக்க
Share your comments