1. செய்திகள்

மழைநீரில் மூழ்கிய 11 சுரங்கப்பாதைகள் மூடல்:சென்னைவாசிகள் வெளியே வரத் தடை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
11 tunnels submerged in rain closed: People in Chennai barred from leaving their homes!

Credit : Maalaimalar

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக, சென்னையில் மொத்தம் 11 சுரங்கப்பாதைகள் மழைநீரில் மூழ்கியதால் மூடப்பட்டுள்ளன.

சென்னை வசிக்கும் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடரும் அவதி

வடகிழக்குப் பருவமழை மற்றும் ஆழ்ந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் நேற்று மாலை முதல் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. சென்னை நகர் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளதால் சென்னை மக்கள் கடந்த 4 நாட்களாக அவதியுற்று வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக பேரிடர் மீட்பு குழுவினர் களத்தில் இறங்கியுள்ளனர்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமா சென்னை மாநகரில் நேற்று மாலை முதல் அதிகனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 11 சுரங்கப் பாதைகள் மழைநீரில் மூழ்கியுள்ளன. எனவே சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் 

  • வில்லிவாக்கம் சுரங்கப்பாதை

  • தியாகராயர் பகுதியில் மேட்லி சுரங்கப்பாதை,

  • கோடம்பாக்கம் துரைசாமி சுரங்கப்பாதை

  • கொருக்குப்பேட்டை சுரங்கப்பாதை

  • அஜாக்ஸ் சுரங்கப்பாதை

  • கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை

  • பழவந்தாங்கல் சுரங்கப்பாதை

  • தாம்பரம் சுரங்கப்பாதை

  • கணேசபுரம் சுரங்கப்பாதை

  • வியாசர்பாடி சுரங்கப்பாதை

  • அரங்கநாதன் சுரங்கப்பாதை

இதேபோல் 7 சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


ஆணையர் எச்சரிக்கை (Commissioner warning)

அதி கன மழை காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார் .

மேலும் படிக்க...


அதிதீவிரக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி 11-ந்தேதி சென்னையை நெருங்கும்: மிக மிக பலத்த மழை எச்சரிக்கை!

2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் 20 செ.மீ. மழை!

English Summary: 11 tunnels submerged in rain closed: People in Chennai barred from leaving their homes!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.