அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் விஷம் கலந்த காளான்களை உட்கொண்டதில் ஏற்பட்ட உடல் நலகுறைவால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மட்டும் ஒன்பது பேர் உயிரிழந்தனர். நேற்று முன் தினம் நான்கு பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதனால் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் விஷம் கலந்த காளான்களை உட்கொண்டதில் ஏற்பட்ட உடல் நலகுறைவால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மட்டும் ஒன்பது பேர் உயிரிழந்தனர். நேற்று முன் தினம் நான்கு பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதனால் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
இதுக்குறித்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பிரசாந்த் டிஹிங்கியா கூறுகையில், விஷத்தன்மை காளானால் பாதிக்கப்பட்ட அனைவரும் அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில்,13 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறினார்.கடந்த வாரத்தில் மட்டும் விஷ காளான் உட்கொண்டதால் ஒரு குழந்தை உள்பட 13 பேர் பலியாகியுள்ளனர். மேல் அசாம் பிராந்தியத்தின் நான்கு மாவட்டங்களில் விஷ காளான் சாப்பிட்ட மொத்தம் 35 பேர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சாரெய்டியோ, திப்ருகார், சிவசாகர் மற்றும் டின்சுகியா ஆகிய மேல் அஸ்ஸாம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிவித்தார்.
பலியான அனைவரும் வீடுகளை சுற்றி வளர்ந்திருந்த காட்டு நச்சு காளான்களை உட்கொண்டுள்ளதாகவும் குமட்டல், வாந்தி, கடுமையான வயிற்றுப் பிடிப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். நான்கு குழந்தைகள் உட்பட 35 பேர் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மற்றொரு குழந்தையின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
பலியானவர்களில் பெரும்பாலானோர் தேயிலை தோட்டத்தில் பணி செய்வர்கள். குறிப்பாக தேயிலை தோட்டங்களில் பணி புரிவர்கள் தான் விஷ தன்மை வாய்ந்த காளானை உட்கொள்கின்றனர். மேலும் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. மக்கள் காடுகளில் இருந்து பறிக்கும் காளான்களை உண்ணக்கூடிய காளான்கள் என்று தவறாக நினைக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க காளான்களை உட்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மழைக்காலங்களில் காடுகளில் காளான்கள் பூக்கும் தருணங்களில் இதுபோன்ற பாதிப்புகளால் மக்கள் மருத்துவமனையில் அதிகமாக அனுமதிக்கபடுவது பொதுவாக காணப்படுகிறது. மேலும் காடுகளில் வளரக்கூடிய காளான்களில் எது உண்ணக்கூடிய வகை, எது நச்சு வகை என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. ஏனெனில் இரண்டு வகை களான்களும் ஒரே மாதிரியாக இருப்பதால், இது போன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் ஏற்படுகின்றன என்றும் மருத்துவர் பிரசாந்த் டிஹிங்கியா கூறினார். விஷ தன்மை வாய்ந்த காளான்களை உட்கொண்டால், சாப்பிட்ட 6 மணி நேரத்திற்குள் உடலில் அறிகுறிகள் தென்படும். இல்லையெனில் 20 நாட்கள் கழித்தும் கூட பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க
முக்கிய அறிவிப்பு: எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ரூ. 10,000 வரை மானியம்!
Share your comments