திருநெல்வேலியில், பிசானப் பயிர் சாகுபடி (Cultivation of pecan crop) தொடங்க உள்ள நிலையில் உரத்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, கேரள மாநிலம் கொச்சியில் இருந்து, சரக்கு இரயில் (Freight train) மூலம் 1330 மெட்ரிக் டன் பாக்டம்பாஸ் உரம் (Bactambus Fertilizer) திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்துள்ளது. இதனால், உரத்தட்டுப்பாடு குறைந்து, விவசாயத்திற்குத் தேவையான உரம் போதுமான அளவு கிடைக்கும். உரம் வந்தடைந்ததை அறிந்த, திருநெல்வேலி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை:
திருநெல்வேலி மாவட்டத்தில், தற்போது பிசானப் பருவ சாகுபடி தொடங்கவுள்ள நிலையில், உரத்தட்டுப்பாட்டைக் குறைக்க, ஏதேனும் ஏற்பாடு செய்ய வேண்டும் என வேளாண் துறையிடம் (Department of Agriculture) விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கான முன்னேற்பாடுகளை, வேளாண் துறை செய்து வந்தது. அதன்படி, கேரள மாநிலம் கொச்சியிலிருந்து, சரக்கு இரயில் மூலம், 1330 மெட்ரிக் டன் பாக்டம்பாஸ் உரம் நெல்லைக்கு வந்து சேர்ந்துள்ளது.
தென்காசி (ம) தூத்துக்குடி மாவட்டங்களுக்கும் உரம்:
வந்தடைந்த 1330 மெட்ரிக் டன் பாக்டம்பாஸ் உரத்தில், 300 மெட்ரிக் டன் உர மூட்டைகள், தூத்துக்குடி மாவட்டத்திற்கு லாரிகளில் (Truck) அனுப்பி வைக்கப்பட்டது. மீதமுள்ள 1030 மெட்ரிக் டன் உரம் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. இந்த உரம், அரசு வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் (Government Agricultural Cooperative Credit Societies) மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு (Private fertilizer outlets) அனுப்பப்படும்.
உரம் பதுக்கப்படுவதை தடுத்தல்:
விவசாயிகளுக்கு வந்து சேர வேண்டிய உரங்கள், சிலரால் பதுக்கப்பட்டு, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அவ்வப்போது புகார்கள் (Complaints) வந்த வண்ணம் உள்ளன. எனவே, இம்முறை அவ்வாறு நிகழாமல் தடுக்க, வேளாண் துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது, கொண்டு வரப்பட்ட உரத்தை முறையாக விற்பனை செய்வதைக் கண்காணிக்க, அனைத்து வேளாண் விற்பனை அலுவலர்களுக்கும் (Agricultural Sales Officer) உத்தரவிட்டுள்ளதாக, மாவட்ட வேளாண் இணை இயக்குநர், கஜேந்திர பாண்டியன் (Gajendra Pandian) தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடிக்கு 8,000 மெட்ரிக் டன் உரம்:
நெல்லையை அடுத்து, கப்பல் (Ship) மூலமாக 8,000 மெட்ரிக் டன் பாக்டம்பாஸ் உரம், தூத்துக்குடி துறைமுகம் (Thoothukudi Port) வரவுள்ளதாக மாவட்ட வேளாண் உதவி இயக்குநர், கற்பகராஜ் குமார் (Karbhakaraj Kumar) தெரிவித்தார். உரங்களின் வருகையை அறிந்த விவசாயிகள், மகிழ்ச்சியில் உள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
பூச்சிகளிடமிருந்து பயிரைக் காக்கும் இயற்கை உரங்கள்!
ஊரடங்குத் தளர்விற்குப் பின், கல்வராயன் மலைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை!
Share your comments