தொடர் கனமழை காரணமாக, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தண்ணீர் தீவு
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து பெய்து வரும் இந்த கனமழையால், தாழ்வானப் பகுதிகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கிக் காட்சியளிக்கின்றன.
குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வீடுகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நேரில் ஆய்வு
இதனிடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வடசென்னை, மத்திய சென்னையில் மழை வெள்ளம் தேங்கியுள்ள இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். மழை வெள்ளத்தை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், திடீரென குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்துள்ளதால் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
விடுமுறை (Holidays)
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
தள்ளிப்போடுங்கள்
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றுள்ள மக்கள் சென்னைத் திரும்புவதை ஒன்றிரண்டு நாட்கள் தள்ளிப்போடுமாறுக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.
மேலும் படிக்க...
4 நாட்களுக்கு மிக கனமழை - சென்னைக்கு ரெட் அலேர்ட்!
தினமும் கீரை சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் - மக்களே உஷார்!
Share your comments