1. செய்திகள்

2 நாட்கள் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை - விபரம் உள்ளே!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
2 days school and college holidays - details inside!

Credit : Top Tamil News

புதியக் காற்றழுத்தத்தாழ்வு காரணமாக, இன்றும், நாளையும் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல  மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை (Heavy rain)

வடகிழக்கு பருவமழை காரணமாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் சென்னை உட்பட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து நீர்நிலைகளில் நிரம்பி வழிகின்றன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைகளில் இருந்து உபரி வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் தாழ்வானப் பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. தேங்கியுள்ள நீரை மோட்டர் உதவியுடன் வெளியேற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், பாதிக்கப்பட்ட மக்கள், அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு, உணவு, உடை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

உருவானது தாழ்வுப்பகுதி (Depression Formed)

இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக பல மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கனமழை எச்சரிக்கை காரணமாக , சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை திருவாரூர் , நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்றும்(நவ.10) மற்றும் நாளையும்(நவ.11) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இன்று மட்டும் விடுமுறை

அதனை தொடர்ந்து சேலம், விழுப்புரம், கரூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுள்ளது.

திருச்சி, திருவண்ணாமலை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் (Precautionary arrangements)

அதேநேரத்தில் அதி கனமழையை எதிர்கொள்ள ஏதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. அதேநேரத்தில் தாழ்வானப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தமிழ்நாட்டில் மிக கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை!

2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் 20 செ.மீ. மழை!

 

English Summary: 2 days school and college holidays - details inside!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.