வானில் பறந்துகொண்டிருந்த இரண்டு போர் விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி உடைந்து விழுந்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில், விமான படை சார்பில் 2 ஆம் உலக போரின் போது பயன்படுத்தப்பட்ட விமானங்களில் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் பெரிய ரக போயிங் பி-17 குண்டுகள் வீசும் விமானம் மற்றும் சிறிய ரக பெல் பி-63 கிங்கோப்ரா உள்ளிட்ட விமானங்கள் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டது. அப்போது இந்த இரு விமானங்களும் திடீரென ஒன்றோடு ஒன்று மோதி தரையில் விழுந்து நொறுங்கியது. நேராக முன்னோக்கி சென்ற போயிங் விமானத்தின் மீது அதன் இடதுபுறத்தில் சென்ற சிறிய விமானம் மோதியது.
இந்த சம்பவம் குறித்து டெக்சாஸ் போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, ‘டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் விண்டேஜ் ஏர் ஷோ நடந்து கொண்டிருந்தது. போயிங் பி-17 விமானம் ஒன்று வானில் சாகசங்களை செய்து கொண்டிருந்தது. திடீரென்று பெல் பி-63 என்ற மற்றொரு விமானம் குறுக்கே வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக இரு விமானங்களும் மோதிக்கொண்டன. இதனால் தீ விபத்தில் இரு விமானங்களும் தீயில் எரிந்தது. 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தன. இதில் விமானி உட்பட 6 பேர் இந்த விபத்தில் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது’ என்று கூறினார்.
மேலும் படிக்க:
Share your comments