தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் குறிக்கோள், எல்லா குடிமக்களுக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு உணவு (Food) வழங்குதல் ஆகும். பொது விநியோகத் திட்டம், அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் ஒவ்வொரு மாதமும் நியாய விலைக் கடைகள் (Ration shops) மூலம் ஏழை மக்களுக்கு வழங்குகிறது. இதன்படி இந்தாண்டு, திருவாரூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு பொது விநியோக திட்டத்துக்காக (Public Distribution Project) சரக்கு ரெயிலில் 2 ஆயிரம் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.
பொது விநியோகத் திட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் (Paddy Procurement Stations) மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல், மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அரிசி மூட்டைகளாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் (Storage warehouse) இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த அரிசி மூட்டைகள், பொதுவிநியோக திட்டத்துக்காக பல மாவட்டங்களுக்கு ரெயில் (Train) மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
2 ஆயிரம் டன் அரிசி
திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம், திருவாரூர் ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டன. அதனை தொடர்ந்து லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் 42 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 2 ஆயிரம் டன் அரிசி பொதுவிநியோக திட்டத்துக்காக திருவாரூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
திட்டத்தின் நோக்கங்கள்
- தமிழ்நாட்டில் உள்ள நீடித்த பட்டினி மற்றும் உணவு பற்றாக்குறையை (Food shortages) நீக்க
- அத்தியாவசியமான பொருட்களின் விலை உயர்வால் வரும் தவறான விளைவுகளில் இருந்து குடிமக்களை பாதுகாக்க
- அத்தியாவசியமான பொருட்கள் வழங்குதல் மூலம், நுண் ஊட்டச்சத்து குறைப்பாட்டை குறைக்க
- உள்நாட்டு எரிபொருள்களை மலிவாக வழங்க
- பயனாளிகள், நியாய விலைக் கடைகளை (Ration Shops) எளிதாக அணுக
- ஏழை மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் வழங்க
- ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில், அத்தியாவசியமான பொருட்களை வழங்க
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
விவசாயிகளை ஒன்றிணைத்து 5000 ஏக்கரில் முருங்கை விவசாயம் செய்ய இலக்கு!
மார்ச் 26-இல் மீண்டும் பாரத் பந்த்! விவசாயிகளுக்கு அழைப்பு
Share your comments