2015 க்குப்பின் சென்னையில் மீண்டும் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக நகர்ப்பகுதிகள் பெரும் அளவில் பாதிக்ப்படும் சூழல் உருவாகி உள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
ரெட் அலர்ட்
நேற்று விடிய, விடிய மழை கொட்டியது. இந்த மழை இன்னும் அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் ரெட் அலர்ட் (Red Alert) விடப்பட்டுள்ளது.
2015 ல் பெய்த அதிக மழையால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். இது போல் இன்று சென்னையின் முக்கிய வீதிகள் தண்ணீரில் மிதக்கிறது. திநகர் துரைசாமி சுரங்கப்பாதை மூடப்பட்டது. இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழை பாதிப்புக்கு தொடர்பு கொள்ள
சென்னையில் மழை மற்றும் வெள்ளம் தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இதன்படி,
1913
04425619206
04425619207
04425619208 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்
9445477205 என்ற வாட்ஸ் ஆப் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.
மழை வெள்ளம் மற்றும் மரம் விழுந்துள்ளது தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மழை அளவு
சென்னையில் இன்று அதிகப்பட்சமாக நுங்கம்பாக்கத்தில் 20 செ..மீ., வில்லிவாக்கத்தில் 16 செ.மீ. மழை பெய்துள்ளது.
- வில்லிவாக்கம் - 19 செ.மீ.,
- எம்ஆர்சி நகர்-15 செ.மீ.,
- அண்ணா பல்கலை-14 செ.மீ.,
- புழல் -13 செ.மீ.,
- தரமணி -10 செ.மீ.,
- மீனம்பாக்கம்- 09 செ.மீ.,
மேலும் படிக்க
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- தமிழகத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை!
Share your comments