தற்போது பாரம்பரியமான இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பலர் முன் வந்து இயற்கை விவசாயங்களை செய்து வருகிறார்கள். இதுபோன்று தஞ்சையில் இயக்கி வரும் நண்பன் இயற்கை பண்ணையின் நிறுவனர் 200 ஏக்கரில் இயற்கை விவசாயம், ஒருங்கிணைந்த பண்ணை போன்ற முழுவதுமான இயற்கை விவசாயத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு சாதித்து வருகிறார்.
தஞ்சாவூர் சீனிவாசபுரம் சாலையில் அமைந்துள்ள இந்த நண்பன் இயற்கை பண்ணையில், இயற்கை தானியம், பாரம்பரிய அரிசி, கோதுமை, போன்றவைகளும் திணை வகை, தானிய பயிர் வகை, உணவுக்காக பயன்படுத்தப்படும் எண்ணெய் முதல் காய்கறி வரை அனைத்தையும் முழுவதுமான இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களை மக்களிடம் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.
இதில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் இவர்களே விவசாயம் செய்தவையாகும். சுமார் 200 ஏக்கரில் தஞ்சையில் இயற்கை முறையில் விவசாயம் செய்து, விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி அளித்து, நிரந்தர வேலை வாய்ப்பும் அமைத்து தருகிறார்.
அதில் சாகுபடி செய்த பொருட்களையே மக்களிடம் விற்பனை செய்கிறார். மேலும் வணிகமாக இயற்கை விவசாயத்தை சந்தைப்படுத்துவதற்கான சான்றிதழும் பெற்றுள்ளார்.
இதன் மூலம் வெளி மாநிலங்களில் இயற்கை விவசாயம் செய்யும் சங்கத்திடமோ, விவசாயிகளிடமோ, நம் மண்ணில் விளையாத சில காய்கறிகள் மற்றும் பல தினை, எண்ணெய் போன்ற பல உணவு பொருட்களை இறக்குமதி செய்து தஞ்சை மக்களிடம் விற்பனை செய்து வருகிறார்.
இதுகுறித்து பேசிய விவசாயி புதுமைச்செல்வன், ‘தற்போது இருக்கும் உணவு முறைகள் பல ரசாயண இடு பொருட்களை கொண்டு, உற்பத்தியை மட்டுமே அதிகரிக்கும் நோக்கில் செய்யப்பட்டுவருகிறது. அதனால், இயற்கை விவசாயமும், நம் பாரம்பரியமும் மறைக்கப்பட்டு வருகிறது. இதனை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் என்னால் முடிந்த பல முயற்சிகளை செய்து வருகிறேன்.
மேலும் பலர் முன்வந்து இயற்கை விவசாயம் செய்தும் வருகின்றனர். இதே வேகத்தில் சென்றால் 5 வருடங்களில் தமிழ்நாடு முழுவதும் இயற்கை விவசாயம் செய்யும் மாநிலமாக மாறும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க:
Share your comments