உலக அளவில் கோவிட் பெருந்தொற்றின் 2வது அலை கட்டுக்குள் வரும் நிலையில், தற்போது திடீரென மீண்டும் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) அச்சம் தெரிவித்துள்ளது.
கொரோனா உயிரிழப்பு
உலக அளவில் இதுவரை 19.5 கோடி பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 41.8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் 69 ஆயிரம் பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இதனால் கோவிட் உயிரிழப்பு 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலான உயிரிழப்பு அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்டு உள்ளன. குறிப்பாக, கோவிட் தடுப்பூசியின் (Covid Vaccine) இரு டோஸ்களையும் செலுத்திக் கொள்ளாதவர்களே தீவிர தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
தடுப்பூசி செலுத்திக் கொள்வதே உயிரிழப்பை தடுக்கும். ஆனால் பல ஏழை நாடுகளில் முன்களப் பணியாளர்களுக்கே தடுப்பூசி கிடைக்காத நிலை நீடிக்கிறது. இந்த நிலையை மாற்ற வளர்ந்த நாடுகள் உதவ முன்வர வேண்டும். அதேபோல், கோவிட் புதிய பாதிப்புகளும் கடந்த வாரத்தில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே வேகத்தில் சென்றால், இன்னும் இரு வாரங்களில் ஒட்டுமொத்த பாதிப்பு 20 கோடியை மிஞ்சிவிடும். அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் புதிய பாதிப்பு அதிகமாகி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
27 வகை கொரோனாக்களை சமாளிக்கும் திறன் பெற்ற தடுப்பு மருந்து!
நாடு முழுதும் ஆகஸ்ட் மாதம் முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி
Share your comments