சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வௌவால்களில் இருந்து 24 புதிய வகை கொரோனா வைரஸை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்
சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகாள உலகமே பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. கொரோனா பாதிப்பால் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகள் மட்டும் பாதிக்கப்படவில்லை. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளும்கூட கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
வௌவால்களில் இருந்தே மனிதர்களுக்கு கொரோனா பரவியதாகச் சீனா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், உலகின் பல நாடுகளும் இதை நம்ப மறுக்கின்றன. வூஹான் வைராலஜி மையத்தில் இருந்தே கொரோனா பரவியிருக்கும் என உலக நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன.
இந்த கொரோனா வைரஸ் பல்வேறு விதமாக உருமாறி 2வது, 3வது அலையாக சில நாடுகளில் வீரியமாகவும் பரவி வருகிறது. இப்படி உலகையே புரட்டிப்போட்ட கொரோனாவின் தோற்றம் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கொரோனா தோற்றம் குறித்து முறையான மற்றும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
புதிய வகை கொரோனா வைரஸ்
இந்தச் சூழ்நிலையில், சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய வகை கொரோனா வைரஸ்களை காடுகளில் இருந்து சேகரித்துள்ளதாக அறிவித்துள்ளனர். வௌவால்கள் மத்தியில் எத்தனை கொரோனா வகைகள் உள்ளன என்பது குறித்தும் அதில் எத்தனை வகைகள் மனிதர்களுக்குப் பரவும் அபாயம் உள்ளது என்பது குறித்தும் கண்டறிய இது உதவும் எனச் சீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
திசைதிருப்பும் முயற்சி
கொரோனா வைரஸ் வூஹான் வைராலஜி மையத்தில் இருந்து கொரோனா பரவியிருக்கலாம் என்ற கருத்து ஒவ்வொரு நாளும் வலுவாகி வரும் நிலையில் சீனா ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் வௌவால்களில் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பு அதிகம் என அவர்கள் கூறியுள்ளனர். இது கொரோனா தோற்றம் குறித்த விசாரணையைத் திசைதிருப்ப நடத்தப்படும் முயற்சியா என்றும் சில ஆய்வாளர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
மேலும் படிக்க...
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனாவால் மரணம் இல்லை- எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு! - 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதி!!
மீனவரை விழுங்கித் துப்பிய திமிங்கலம்- அமெரிக்காவில் விநோதம்!
Share your comments