பிரதமரின் ஸ்வாநிதித் திட்டத்திற்கு (Swanithi project) நடைபாதை வியாபாரிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பிரதமரின் நடைபாதை வியாபாரிகள் தற்சார்பு நிதியான, பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் 25 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன.
5.35 லட்சம் கடன்:
ஸ்வாநிதி திட்டத்தில், 12 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 5.35 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இதுவரை பெறப்பட்டுள்ள 6.5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களில் 3.27 லட்சம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 1.87 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளன.
இணைய வழி விண்ணப்பம்:
கோவிட்-19 (Covid-19) காரணமாக தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ள வியாபாரிகள் ஊர் திரும்பிய பிறகு, இந்தத் திட்டத்தின் மூலம் கடன்களைப் பெற்றுப் பயனடையலாம். கடன் பெறுவதற்கு வியாபாரிகள் சுலபமாக தாங்களாகவே இணையதளம் (Online) வாயிலாகவோ அல்லது வங்கிகள் அல்லது நகராட்சி அலுவலகங்களுக்குச் சென்றோ விண்ணப்பிக்கலாம். கடன் தொகையை வங்கிகள் நேரடியாக மக்களின் வீடுகளுக்குச் சென்று வழங்குகின்றன.
வங்கி ஊழியர்களின் பங்களிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), “ஒரு காலத்தில் நடைபாதை வியாபாரிகள் வங்கியினுள் நுழையாமல் இருந்தனர். இன்று வங்கியே அவர்களது வீடுகளுக்குச் செல்கின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கூட்டுறவு வங்கிகளைப் போல் இனி மாநில வேளாண் வங்கியிலும் விவசாயக் கடன்!
காங்கேயம் மாடுகளுக்காக தனிச்சந்தை! ரூ.12 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை!
Share your comments