டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம் (ICAR) ஆண்டு தோறும் வேளாண் இளநிலை பட்டப்படிப்புக்கு அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது.
இத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களை, அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில வேளாண் பல்கலைக்கழகங்களில் உள்ள மொத்த இடங்களில் 15 சதவிகித இடத்தை நிரப்புவர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்கழகத்தால் (ICAR) அங்கிகாரம் பெற்ற கல்லூரிகளில், இளங்கலைப் பாடப்பிரிவுகளின் மாணவர் சேர்க்கைக்கான மொத்த இடங்களில் 15 சதவிகிதமான 120 இருக்கை ஒதுக்க செய்யப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இதில் தமிழகத்தைச் சேர்த் 30 மாணவர்கள் (அதாவது 25 சதவீதம்) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் பயிற்றுவிக்கப்படும் இளங்கலைப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
மாணவர்களின் சாதனையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நீ குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தரவரிசை வரம்பு
இதனிடையே தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான, இளங்கலை மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுக் கலந்தாய்வு, வரும் 26ம் தேதி முதல் 28.11.2020 வரை (3நாட்கள்) இணையதளம் வாயிலாக நடைபெறுகிறது.
இதில், இணையதள முதற்கட்ட கலந்தாய்விற்கான தரவரிசை வரம்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
வேளாண்மை இளங்கலை பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு தேதி - அறிவித்தது TNAU!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முதுகலைக் கல்லூரிகள்- டிச. 2ம் தேதிமுதல் மீண்டும் திறப்பு!
Share your comments