சிப்காட் தொழிற் பூங்காக்களில், முதன் முறையாக, பசுமை வளம் பெருகிட, 10.36 கோடி ரூபாய் மதிப்பில், 2.63 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கப்பட்டுள்ளது.
2.6 லட்சம் மரக்கன்றுகள் நடவு:
சிப்காட் (Sipcot) நிறுவனம் எனப்படும், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தொழில் பூங்காக்கள் உள்ள இடங்களை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறது. தமிழகத்தில், 15 மாவட்டங்களில், 33 ஆயிரத்து, 776 ஏக்கர் பரப்பளவில், ஏழு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட, 23 தொழில் பூங்காக்கள் உள்ளன. இவற்றில், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் (M.C. Sampath) 2019 ஜூலையில், அனைத்து தொழில் பூங்காக்களிலும் மரக்கன்றுகள் (Saplings) நடப்படும் என, சட்ட சபையில் அறிவித்தார். அதன்படி, வனத் துறை தோட்டங்களில் வளர்க்கப் படும் மரக்கன்றுகளில், 2.6 லட்சம் மரக்கன்றுகளை, 10.36 கோடி ரூபாய் செலவில், தொழில் பூங்காக்களில் நட திட்டமிடப்பட்டு, இதுவரை, இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
32 வகையான மரக்கன்றுகள்:
மரக்கன்றுகள், செய்யாறு, ராணிப்பேட்டை, கடலுார், ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், ஓசூர், நிலக்கோட்டை, சிறுசேரி, இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட, 18 தொழில் பூங்காக்களில், உள்நாட்டு மரக்கன்று வகைகளான, வேம்பு (Neem), புளி, புங்கன், மருது. நீர்மருது, நீர்மத்து, பூவரசு, ஆல், நாவல், ஜம்புநாவல், கொய்யா, மா, தான்றி, மரமல்லி, கொடுக்கா புளி, சொர்கம், அரசு மகாகனி, இலுப்பை, சில்வர் ஓக், அசோகா, இயல்வாகை, ஆயன், மந்தாரை, வசந்தமல்லி, பாசடி, பாதாம், நெல்லி, பலா, வாகை, ஆவி, துாங்குவகை என 32 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
மீதமுள்ள மரக்கன்றுகளை, ஜனவரி மாதத்திற்குள் நட்டு முடிக்க திட்டமிடப்பட்டு, பணிநடந்து வருகிறது என, சிப்காட் மேலாண் இயக்குனர் குமரகுருபரன் (kumara kurubaran) தெரிவித்துள்ளார். மரக்கன்றுகள் நடுவதால், தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பசுமையான சுற்றுச்சூழல் அமையும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பிரம்மாண்ட மாடித் தோட்டத்தை அமைத்த மணலி மண்டலம்!
பொங்கல் பரிசுடன் கரும்பு! கொள்முதல் செய்ய விவசாயிகளைத் தேடும் பணியில் அரசு!
Share your comments