1. செய்திகள்

27,500 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி! தூத்துக்குடி துறைமுகம் வந்தது!

KJ Staff
KJ Staff
Credit : Dinakaran

விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக, 27,500 மெட்ரிக் டன் உரம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு (Thoothukudi port) வந்தடைந்தது.

27,500 மெட்ரிக் டன் உரம்:

ஃபெர்டிலைசர்ஸ் அன்டு கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் (ஃபேக்ட்) நிறுவனம் இறக்குமதி (Import) செய்த, மியூரியேட் ஆஃப் பொட்டாஷ் என்னும் உரத்தை தாங்கிய மூன்றாவது கப்பல், தூத்துக்குடி துறைமுகத்தை வந்தடைந்தது. விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக 27,500 மெட்ரிக் டன்கள் மியூரியேட் ஆஃப் பொட்டாஷ் உரம் (Muriate of potash fertilizer) இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சரக்கை இறக்கி மூட்டைகளில் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன் மூலம், இந்த வருடத்தில் 82,000 மெட்ரிக் டன்கள் மியூரியேட் ஆஃப் பொட்டாஷ் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று இறக்குமதி ஆர்டர்களை ஃபேக்ட் நிறுவனம் செய்திருந்தது.

விவசாயிகள் விரும்பும் உரங்கள்:

மத்திய ரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான ஃபேக்ட்-இன் முக்கிய தயாரிப்பான ஃபேக்டம்பாஸ் (Factambass) மற்றும் மியூரியேட் ஆஃப் பொட்டாஷ் ஆகியவை இணைந்த உரக்கலவையை தென்னிந்திய விவசாயிகள் மிகவும் விரும்புகிறார்கள். இந்த ஆண்டில் இன்னும் இரண்டு 'பார்சல்களை' கொண்டு வர இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக, காரிப் பருவத்தில், விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இரண்டு கப்பல்களில் மியூரியேட் ஆஃப் பொட்டாஷையும், ஒரு தொகுப்பு என்.பி.கே. (NPK)-வையும் ஃபேக்ட் (FACT) இறக்குமதி செய்தது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் திட்டம்! தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சூரியகாந்தி விதைகள்!

English Summary: 27,500 metric tons of fertilizer imported! Thoothukudi port arrived! Published on: 29 October 2020, 12:44 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.