தடுப்பூசிக்கான மத்திய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் என்.கே. அரோரா, ஒமைக்ரானால் மூன்றாம் அலை ஏற்படாமல் தடுக்க கோவிட் நடத்தை விதிகளை பின்பற்றுவது, தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரிப்பது, ஊரடங்கு ஆகிய 3 காரணிகள் உதவும் என்றார்.
தொற்று அதிகரிப்பு (Infection increased)
ஒமைக்ரான் வகை வைரஸ் பரவலால் கடந்த இரு வாரங்களாக இந்தியாவில் கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே சமயம் இதன் அறிகுறிகள் காய்ச்சல், சளி தொந்தரவு என்ற அளவிலேயே உள்ளது. டெல்டா வகையை போன்று மூச்சுத்திணறல், ஆக்சிஜன் அளவு குறைவது போன்றவை இதுவரை இல்லை. இன்று, இந்தியாவில் 1.6 லட்சம் பேரிடம் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 208 நாட்களில் இது அதிகபட்ச அளவாகும்.
3 முக்கிய காரணிகள் (3 Important key factors)
இந்நிலையில் தடுப்பூசித் திட்டத்துக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறியதாவது: ஐ.ஐ.டி., மாதிரிகள், வரும் நாட்களில் கோவிட் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என்பதைக் காட்டுகிறது. அது தற்போதே நடக்கிறது. தென் ஆப்ரிக்காவில் ஒமைக்ரான் அலை, இரண்டு வாரங்களில் வேகமாக அதிகரித்தது. பின்னர் தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
இந்தியாவில் தற்போது உச்சநிலை நிகழ்கிறது. இருப்பினும், இந்தியாவில் தடுப்பூசி விகிதம் பல மடங்காக உள்ளது. கோவிட் நடத்தை விதிகள், தடுப்பூசி ஆகியவை நோய் பரவலை கட்டுப்படுத்தும். ஊரடங்கும் அதற்கு உதவும், என்றார்.
மேலும் படிக்க
மத்திய அரசு வெளியிட்டுள்ள பூஸ்டர் டோஸ் பற்றிய முக்கிய தகவல்!
Share your comments