1. செய்திகள்

ரயில் தடம்புரண்டு விபத்து- 6 பேர் பலியான பரிதாபம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
3 killed in train derailment

மேற்குவங்க மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் ரயில் பயணிகள் மரண அச்சத்தில் இருந்தது நெஞ்சை உருக்குவதாக அமைந்திருந்தது.

ரயில் பயணம் (Rail travel)

எப்போதாவது ரயில் விபத்துகள் நிகழ்வது வாடிக்கை என்றபோதிலும், அதன் நினைவுகள், ரயிலில் பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் நமக்குள் அச்சத்தை ஏற்படுத்தாமல் இல்லை. இருப்பினும், தொழில், பணி மற்றும் சொந்தக் காரணங்களுக்காக ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.

பயங்கர விபத்து (Terrible accident)

ராஜஸ்தானில் இருந்து அசாம் நோக்கிச் சென்ற கவுஹாத்தி - பிகானர் விரைவு ரயில் மேற்கு வங்க மாநிலத்தின் தோமாஹானி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலைவில், பயங்கர சத்தத்துடன் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளாயின.

இந்த விபத்தில் 3 பேர் உடல்நசுங்கி பலியானார்கள். 20 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, படுகாயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

இந்த விபத்தில்12-க்கும் மேற்பட்டப் பெட்டிகள் சேதமடைந்தன. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உயர்மட்ட விசாரணை

சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள் விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தினர். இதையடுத்து விபத்திற்கான காரணம் குறித்து ஆராய்வதற்காக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க...

சமையல் எண்ணெய் விலை: முதல் முறையாக வீழ்ச்சி

சமையல் எண்ணெய் விலை குறைந்தது, மகிழ்ச்சியில் தமிழகம்!

English Summary: 3 killed in train derailment Published on: 13 January 2022, 10:07 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.