ஆந்திராவில், ஒரே நேரத்தில் 34 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது, மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. பிள்ளைகளைப் பறிகொடுத்தப் பெற்றோர் செய்வதறியாது அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆவர். தோல்வி அடைந்தததன் விரக்தியே இவர்கள் தற்கொலை செய்துகொள்ளக் காரணம்.
பொதுத் தேர்வு
ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு சமீபத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில் . அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆறு லட்சம் மாணவ - மாணவியர் தேர்வு எழுதினர்.
2 லட்சம் பேர் தோல்வி
கடந்த 3-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், நான்கு லட்சம் பேர் தேர்ச்சி அடைந்துஇருந்தனர். தேர்ச்சி அடையாத இரண்டு லட்சம் பேரில் 34 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆறுதல்
தற்கொலை செய்து கொண்ட மாணவ - மாணவியரின் பெற்றோருக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆறுதல் கூறினார்.
தேர்வில் தோல்வி என்பது வாழ்வின் முடிவு அல்ல. மீண்டும் பயின்றுத் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற முடியும் என்ற நம்பிக்கையை இவர்கள் மனதில் வேரூரன்றத் தவறியதே இந்த உயிர்கள் பிரிந்தததற்கு காரணம்.
மேலும் படிக்க...
Share your comments