பிரதமர் கிசான் திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டும் என்றால் ஆதார் அட்டை அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் இல்லையென்றால் திட்டத்தின் பலனை பெறமுடியாது.
விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் திட்டத்தில் ஐந்து பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் முதுகெழும்பாக விவசாயம் கருதப்பட்டு வருகிறது. இத்தகைய நிலையில் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக பலன் அளிக்கும் விதமாக கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் கிசான் யோஜனா தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நான்கு மாத இடைவெளியில் தலா 2000 ரூபாய் என்று ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது.
2018 முதல் 2019 ஆம் ஆண்டில் இந்த திட்டத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. 2019-20 ஆம் ஆண்டில் 2 கோடி விவசாயிகள் பலனடையும் வகையில் திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் 12 கோடி விவசாயிகள் பலன் பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த திட்டத்தில் மேலும் சில மாற்றங்களை ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ளது.
2 ஹெக்டேருக்கு குறைவான சாகுபடி நிலம் உள்ள விவசாயிகள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பலன் அடைய முடியும் என்று விதியிருந்தது, தற்போது அந்த வரம்பு நீக்கப்பட்டுள்ளது.
பிரதமர் கிசான் திட்டத்தில் இணைந்து ஒருவர் பயன்பெற வேண்டும் என்றால் ஆதார் அட்டை அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் இல்லையென்றால் திட்டத்தின் கீழ் பலன் பெற முடியாது.
ஆதார் அட்டை, மொபைல் எண், வங்கி கணக்கு எண் மற்றும் நில விவரங்களை வைத்து pmkisan.nic.in என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனிலேயே விண்ணப்பித்து திட்டத்தில் இணையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய தவணைத் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விட்டதா என்பதை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் சரிபார்க்கலாம். இதற்கான ஆன்லைன் போர்ட்டலில் ஆதார் எண், மொபைல் எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து தவணை குறித்து அறிந்துகொள்ளலாம்.
விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு, பிரதமரின் கிசான் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கிசான் கிரெடிட் கார்டு மூலம் 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.
மேலும் படிக்க:
ஊரடங்கில் மேலும் தளர்வுகள்; முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
கொரோனா 3வது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்: WHO எச்சரிக்கை!
கண்ணாடி இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் வாரண்டி ரத்து: ஐகோர்ட் அதிரடி
Share your comments