1. செய்திகள்

கொரோனா நெருக்கடியை சமாளிக்க இந்தியாவுக்கு 500 மில்லியன் டாலர் உதவி

T. Vigneshwaran
T. Vigneshwaran

தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உலக வங்கி ஒரு பெரிய நிவாரணமாக நிதி உதவி வழங்கியது. இது குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்ட உலக வங்கி நிர்வாக இயக்குநர்கள், இந்தியாவின் முறைசாரா பணியாளர்களை ஆதரிக்க, வரக்கூடிய தொற்றுநோய் அலைகள், எதிர்கால காலநிலை மற்றும் பேரழிவுகளை சமாளிக்க மாநிலங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை உருவாக்குவதற்கு 500 மில்லியன் டாலர் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார்கள்.

ஒருங்கிணைந்த மற்றும் இந்திய சமூக பாதுகாப்பு அமைப்பை உருவாக்குதல் என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம், பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா இன் கீழ் திட்டங்களை ஆதரிப்பதற்காக , இந்தியாவின் 1.15 பில்லியன் டாலர் கொரோனா சமூக பாதுகாப்பு மறுமொழி திட்டத்தை துரிதப்படுத்துகிறது.

உலக வங்கியின் புதிய உதவியுடன், மாநிலங்கள் அதிக நெகிழ்வுத்தன்மையையும் அதிக நிதி உதவியையும் பெறமுடியும்.15 ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் கீழ், நிதிப் பகிர்வு மாநிலங்களுக்கு ஏற்ற சமூக பாதுகாப்பு முறையை உருவாக்க, விலக்கப்பட்ட குழுக்களுக்கு ஆதரவை வழங்கவும், சூழல் சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவியாக இருக்கும்.

உலக வங்கியின் இந்த உதவி கொரோனா நெருக்கடிக்கு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் எந்தவொரு நெருக்கடிக்கும், சுற்றுச்சூழல் அபாயம், இயற்கை பேரழிவுக்கும் உதவியாக இருக்கக்கூடும்.

பெருந்தொற்றால் இலக்கான ஹாட்-ஸ்பாட் மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பேரழிவு நிவாரண நிதிகள், தொற்றின் தற்போதைய கட்டத்திலும், எதிர்காலத்தில் வரக்கூடிய அலைகளிலும் தேவையான முன்னேறுப்பாடுகளை செய்ய உதவியாக இருக்கும் என்று உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இரண்டு  நிதி உதவி செயல்பாடுகள், சுமார் 320 மில்லியன் தனிநபர் வங்கிக் கணக்குகளுக்கு  அவசர நிவாரண பணப் பரிமாற்றங்களை செய்தது. ஏற்கனவே உள்ள தேசிய சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் சுமார் 800 மில்லியன் தனிநபர்களுக்கு கூடுதல் உணவுப் பொருட்களுக்கான கணக்குகல் மூலம் அடையாளம் காணப்பட்டன.

உலக வங்கி 2020 ஆம் ஆண்டில் தொற்றுநோய் தொடங்கியதைத் தொடர்ந்து இரண்டு சிக்கல்கள் வெளிவந்துள்ளன என்று ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

எதிர்பாராத பேரழிவுகளை சமாளிக்க எதிர்கால நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மாநிலம் சார்ந்த பாதுகாப்பு வலைகளை வடிவமைப்பதற்கான அதிகரித்த ஒருங்கிணைப்புக்கான அவசியத்தையும் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க:

கொரோனாத் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ரயில் பயணம் - அதிரடி உத்தரவு!

வேகமாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! : இயல்புநிலைக்கு திரும்புகிறதா தமிழகம்?

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!!

English Summary: $ 500 million aid to India to tackle the Corona crisis Published on: 01 July 2021, 10:54 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.