கோவையில் 75ஆவது சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக 75 மாணவர்கள் கொண்ட குழுவினர் ஆறரை கிலோ மீட்டர் தூரம் சிலம்பம் சுற்றிக்கொண்டு நடை பயணம் செய்து சாதனை நிகழ்த்தினர்.
நாட்டில் 75ஆவது சுதந்திர தினம் நாளை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், கோவை சின்னவேடம்பட்டி கராத்தே பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவ,மாணவிகள் 75ஆவது சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். அதன் படி 75 மாணவர்கள் இணைந்து ஆறரை கிலோ மீட்டர் தூரம் சிலம்பம் சுற்றியபடி நடந்து சாதனை புரிந்துள்ளனர்.
கைகளில் தேசிய கொடி பட்டையம் அணிந்த படி தமிழக பாரம்பரிய கலையான சிலம்பம் சுற்றிக்கொண்டு நடைப்பயணம் மேற்கொண்டனர். ஊர்மக்கள் சாலையோரத்தில் கூடி நின்று கைத்தட்டி மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
மாணவ – மாணவிகள் நடத்திய இந்த சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. தொடர்ந்து சாதனை புரிந்த மாணவ,மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க
பிரதமருடன் ரஜினி சந்திப்பு, என்ன நடந்தது தெரியுமா?
கோவை: ரூ. 25க்கு தேசிய கொடி வாங்கவில்லை என்றால் ரூ. 1000 ஆபராதம்
Share your comments