ஆதார் அட்டை சரிபார்ப்பிற்கு இனிமேல் நபரின் முகம் சரிபார்ப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியுள்ளார். டூப்ளிகேட் ஆதார் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், 6 லட்சம் ஆதார் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன
அடையாளம்
இந்திய மக்களுக்கு ஆதார் அட்டை எவ்வளவு முக்கியமானது. மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற இந்த அட்டைக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அரசு சம்மந்தமான வேலையாக இருந்தாலும் சரி, தனியார் சம்மந்தமான வேலையாக இருந்தாலும் சரி இதற்கு அடையாள சான்றாக ஆதார் அட்டை தான் கேட்கப்படுகிறது. ஆகஇந்திய குடிமக்களின் அடையாளமாக மாறிப்போன ஆதார் அட்டை நமது கருவிழி ரேகை, கைரேகை போன்ற பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டுள்ளது.
டூப்ளிகேட்
ஆதார் அட்டை முக்கியமானதாக மாறிவிட்டதால் டூப்ளிகேட் ஆதார் அட்டை பெறும் சம்பவங்களும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. டூப்ளிகேட் ஆதார் அட்டைகள் தொடர்பாக மக்களவையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் இதுபோன்ற வழக்குகளில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பதிலளித்துள்ளார்.
ரத்து
அவர் கூறியதாவது:-தற்போது யூஐடிஏஐ ரத்துசெய்திருக்கும் ஆதார் கார்டுகளின் எண்ணிக்கையை வைத்து அதிகளவில் டூப்ளிகேட் ஆதார் அட்டைகள் எந்த பகுதியில் உருவாக்கப்படுகிறது என்பதை கண்காணிக்க முடியும். மேலும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், இதுவரையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 598,999 டூப்ளிகேட் ஆதார் அட்டைகளை ரத்து செய்திருப்பதாகவும், டூப்ளிகேட் ஆதார் அட்டைகளை ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும்.
நோட்டீஸ்
ஆதார் அட்டைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் வழக்குகளை கருத்தில் கொண்டு, மத்திய மற்றும் மாநில அளவில் டூப்ளிகேட் ஆதார் அட்டைகள் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆதார் அட்டை தொடர்பான சேவைகளைக் கோரும் சுமார் ஒரு டஜன் டூப்ளிகேட் இணையதளங்களுக்கு யூஐடிஏஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.மேலும் மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டூப்ளிகேட் ஆதார் அட்டை தயாரிக்கும் விவகாரம் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதைத் தடுக்க தேவையான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இனிமேல் முகம்
முன்பு ஆதார் அட்டை சரிபார்ப்பிற்கு கைரேகை மற்றும் கருவிழி ரேகை ஸ்கேன் செய்யப்பட்டு வந்தது, இனிமேல் குறிப்பிட்ட நபரின் முகம் சரிபார்ப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும். மேலும் இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக சுமார் ஒரு லட்சம் ஓய்வூதியதாரர்கள் சரிபார்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சயனைடை விட 6,000 மடங்கு - அதிக நச்சுள்ள உலகின் கொடிய தாவரம்!
Share your comments