இந்தியாவின் மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், மக்களின் நோய்களும் அதிகமாகி கொண்டு வருகிறது. ஆனால் போதிய மருத்துவர்கள் இல்லை என்ற குற்றசாட்டு எழுந்தது. இதனை உறுதி படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பு (Centre for Disease Dynamics Economics and Policy) ஓர் ஆய்வினை மேற்கொண்டது. அதன் அறிக்கை பல்வேறு தகவல்களை கொடுத்துள்ளது.
இந்தியாவில் 6 லட்சம் மருத்துவர்களும், 20 லட்சம் செவிலியர்களும் தேவைப்படுகிறார்கள். 1000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என வளரும் நாடுகளில் சேவை வழங்க படுகிறது. ஆனால் தற்போது இந்தியாவில் 10,189 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் இருக்கின்றனர். நகர்ப்புறங்களைவிட, கிராமப்புற மக்களே, மருத்துவர் பற்றாக்குறையால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் . வியட்நாம், அல்ஜீரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் காணப்படுவதைவிட, மிகக் குறைவான அளவு என்கிறது உலக சுகாதார அமைப்பு.
இதை போலவே செவிலியர்களும் குறைவாகவே உள்ளனர். நோய்க்கான போதிய மருந்துகள் இருந்தும் அதனை வாங்க முடியாமல் மக்கள் உயிர் இழந்துள்ளனர். அவர்களுது வருமானத்தில் 65% மருத்துவ செலவு செய்வதால் 5 கோடியே 70 லட்சம் மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ள படுகின்றனர் என்னும் தகவலை வெளியிட்டுள்ளது.
புதிய நோய் தடுப்பு திட்டம், பயிற்சி போன்றவை குறைவாகவே உள்ளன. 1960 ஆண்டிலிருந்து புதிய நோய் தடுப்பு மருந்துகள்,பரிசோதனை, ஆய்வு போன்று எதுவம் நடை பெறவில்லை என அறிக்கை கொடுத்துள்ளது.
Share your comments