முதலீடுகளை சாதுர்யமாக மேற்கொள்ளும்போது உங்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது. பல்வேறு விதமான முதலீட்டு திட்டங்கள் இருக்கின்றன என்றாலும் நம்முடைய நிதி இலக்குகள், அபாயங்களை எதிர்கொள்ளும் முடிவு மற்றும் லிக்யூடிட்டி தேவைகள் போன்றவற்றை பொருத்து நமக்கானதை முடிவு செய்து கொள்ளலாம்.
பணத்தை பெருக்குவதற்கு நீண்டகால முதலீடுகளில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்பதில்லை. ஓராண்டு முதல் 5 ஆண்டுகளுக்குள் பலன் தரக் கூடிய குறுகிய கால முதலீடுகளையும் மேற்கொள்ளலாம். நாம் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கின்றமோ, அந்த அளவுக்கு லாபங்களையும் எதிர்பார்க்க முடியும்.
லிக்யூட் ஃபண்ட்ஸ்
அவசர தேவைகளுக்காக நம் கையில் எப்போதுமே பணம் இருக்க வேண்டும் என்பதை கொரோனா காலகட்டம் உணர்த்தியிருக்கிறது. ஆக, நம் கையில் குறைந்தபட்சம் ஓராண்டு செலவுகளுக்கான பணம் இருப்பு இருக்க வேண்டும். அதன்படி நம் கையில் மிகுதியான சேமிப்பு இருக்க வேண்டும் என்றால், இருக்கின்ற பணத்தை லிக்யூட் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம்.
இது குறைந்தபட்சம் 91 நாட்கள் முதிர்வு காலத்தை கொண்டது. ஆக, எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறலாம். பொதுவாக 4 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையில் லாபம் கிடைக்கும்.
குறுகிய கால ஃபண்ட் திட்டங்கள்
அல்ட்ரா ஷார்ட் டூரேஷன் பண்ட் என்னும் திட்டமானது 3 முதல் 6 மாதங்களைக் கொண்டதாகும். இதன்படி நீங்கள் நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கலாம். இது கொஞ்சம் அபாயகரமானது தான். ஆனால், வங்கியில் நீங்கள் மேற்கொள்ளும் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு நிகராக அல்லது அதற்கு மேல் உங்களுக்கு லாபம் கிடைக்கும்.
ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்ஸ்
இது ஈக்யூடி மற்றும் ஃபியூச்சர்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தும் திட்டமாகும். இதில் நீங்கள் ஈக்யூடிகளை வாங்கி, பிறகு விற்பனை செய்யலாம். ஆண்டு அடிப்படையில் தோராயமாக 8 முதல் சதவீத லாபம் கிடைக்கும். ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் திட்டத்தில் உள்ள பிரதான சாதகமான விஷயம் என்ன என்றால் இதற்கு ஈக்யூட்டி ஃபண்ட் திட்டங்களின் அடிப்படையிலேயே வரி பிடித்தம் செய்யப்படும்.
மேலும் படிக்க:
Share your comments