இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது. எதிர்க்கட்சிகள் மட்டுமே நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது முன்னாள் அரசு அதிகாரிகளும் அவர்களுடன் கரம் கோர்த்து ஆணையத்திற்கு எதிராக வினா எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் மட்டுமல்லாது பிற மாநில தலைவர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கூறும்போது "தேர்தல் ஆணையத்தின பணி தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதாகும். சமீபகாலமாக ஆணையம் மத்தியில் ஆளும் பா.ஜ.,வை சமாதானபடுத்தும் வகையில் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது" என் கூறியுள்ளார்.
ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் அவர்கள் கூறியதாவது, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள், மற்றும் செயல்பாடு இவை அனைத்தும் மத்தியில் ஆளும் பாஜகவுக்குச் சாதகமாகவும், மற்றும் சலுகைகள் காட்டப்படுவதாகவும் கூறி, கடிதமொன்றை எழுதி அனுப்பியுள்ளனர்.
66 அரசு அதிகாரிகள் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். முன்னாள் வெளியுறவு செயலர், முன்னாள் தலைமை அதிகாரி, முன்னாள் நிர்வாக இயக்குனர், முன்னாள் திட்ட கமிஷன் செயலர் என அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைத்து, கடிதம் எழுதியுள்ளனர். பல்வேறு நடத்தைகளை சுட்டிக்காட்டி, பின் " மிஷன் சக்தி" தொடர்பாக பிரதமர் கூறிய கருத்து நேரிடை தேர்தல் விதிமீறல் என்றே அனைத்து தரப்பினரும் கூறி உள்ளனர்.
Share your comments