1. செய்திகள்

68-வது தேசிய விருதுகள் அறிவிப்பு, சிறந்த நடிகராக சூரியா தேர்வு!

T. Vigneshwaran
T. Vigneshwaran
National awards

இந்திய திரைத்துறையில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்களுக்கு தேசிய விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. அநத வகையில் 68-வது தேசிய விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள திரைப்படங்களில் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டு திரையரங்கம் மற்றும் ஒடிடி தளத்தில் வெளியான 30 மொழிகளில் சுமார் 305 திரைப்படங்கள் 68-வது தேசிய விருக்கான பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை, உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

5 விருதுகளை வென்ற சூரரைப்போற்று

அந்த வகையில் 68-வது தேசிய விருது பட்டியலில் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது. இதில் சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகை அபர்னா பாலமுரளி, சிறந்த இசை ஜி.வி.பிரகாஷ், சிறந்த திரைக்கதை, சிறந்த படம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் சூரரைப்போற்று விருது வென்றுள்ளது.

தமிழில் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது மண்டேலா படத்தை இயக்கிய அஸ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த வசனத்திற்காகவும் அஸ்வினுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த தமிழ் திரைப்படமாக இயக்குநர் வசந்த் இயக்கியுள்ள சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

3 விருதுகளை வென்ற அய்யப்பனும் கோஷியும்

மலையாளத்தில் சிறந்த துணை நடிகருக்கான விருது அய்யப்பனும் கோஷயும் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்த பிஜூ மேனனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த படத்தின் இயக்குநர் மறைந்த சச்சிதானந்தத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள களக்காத்த சந்தனமேரம் என்ற பாடலுக்கான சிறந்த நாட்டுப்புற பாடகிக்கான தேசிய விருது நஞ்சம்மாவுக்கு அறிவிகக்ப்பட்டுள்ளது.

அனூப் ராமகிருஷ்ணன் எழுதிய புத்தகத்திற்கு சிறந்த திரைப்பட புத்தகத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  • சிறந்த துணை நடிகை: லட்சுமி பிரியா சந்திரமௌலி, சிவரஞ்சனியும் இன்னம் சில பெண்களும்
  • சிறந்த இசையமைப்பாளர் : எஸ் எஸ். தமன் ஆலா வைகுந்தபுரமுலு,
  • சிறந்த ஆண் பின்னணிப் பாடகர்: எம்.ஐ.வசந்த்ராவ் பாடலுக்காக ராகுல் தேஷ்பாண்டே மற்றும் தக்டக்கிற்காக அனிஷ் மங்கேஷ் கோசாவி
  • சிறந்த பாடல் வரிகள்: சாய்னா, மனோஜ் முன்டாஷிர்
  • சிறந்த ஒலிப்பதிவு: டோலு, மி வசந்த்ராவ் மற்றும் மாலிக்
  • சிறந்த படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத் சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்

மேலும் படிக்க:

ஃபசல் பீமா யோஜனா: தமிழ்நாட்டில் உள்ள பட்டியல் சாதி விவசாயிகளின் பங்கு இல்லை!

English Summary: 68th National Awards Announcement, Suriya Chosen as Best Actor! Published on: 23 July 2022, 05:55 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.