1. செய்திகள்

நுண்ணுயிர் உர உற்பத்தி மையங்கள் அமைக்க 7 கிராமங்கள் தேர்வு!

R. Balakrishnan
R. Balakrishnan
Organic Fertilizer
Credit : Dinamalar

நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்பிற்கேற்ப அவர்கள் பயன்படுத்தும் பொருட்களின் கழிவுகளால், குப்பைகள் அதிகரிக்கிறது. இதனால், சுற்றுச்சூழல் மாசு (Environmental Pollution) உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுடன், நோய் பரவலுக்கும் குப்பைகள் காரணமாக அமைகிறது.

நுண்ணுயிர் உர உற்பத்தி மையங்கள்

குப்பைகளை அகற்றுவது அரசுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. இந்த குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரமாக (Organic Fertilizer) மாற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் பல முயற்சிகளை செய்தாலும் முழுமையான பலனை பெற முடியாத நிலையே உள்ளது. இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில் நுண்ணுயிர் உர உற்பத்தி மையங்கள் (Microbial Fertilizer Production Centers) அமைத்து குப்பைகளை முழுமையாக கையாள மாவட்ட நிர்வாகம் புதிய முயற்சியை எடுத்துள்ளது.

7 கிராமங்கள்

இது குறித்து, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநரான கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் கூறுகையில், 'மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் மக்கும் குப்பையை உரமாக மாற்றும் பணி நடக்கிறது. ஊராட்சிகளில் சில இடங்களில் இப்பணி நடந்தாலும் முழுமைப் பெறவில்லை. தற்போது, மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகமுள்ள 7 கிராமங்கள் தேர்வு செய்து, நுண்ணுயிர் உர உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் வடக்குத்து ஊராட்சி ,குமராட்சியில் சிதம்பரம் நான் முனிசிபல் ஊராட்சி, கீரப்பாளையம் ஊராட்சி, பரங்கிப்பேட்டையில் சி.கொத்தங்குடி, விருத்தாசலம் ஒன்றியத்தில் கருவேப்பிலங்குறிச்சி, நல்லுாரில் வேப்பூர், மங்களூரில்ராமநத்தம் ஆகிய 7 ஊராட்சிகளில் ரூ.20 லட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இங்கு, மக்கும் குப்பைகளை அதற்காக அமைக்கப்பட்ட தொட்டிகளில் சேகரித்து உரமாக மாற்றப்படும். இதற்காக, குப்பைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கும் இயந்திரங்கள் (Machines) வாங்கப்பட்டுள்ளன. இதனை கட்டமைக்கும் பணி நடந்து வருகிறது. ஒரு வாரத்தில் இப்பணிகள்முடிந்து பயன்பாட்டிற்கு வந்து விடும்.

துாய்மை காவலர்கள்

இதற்காக, ஒரு மையத்திற்கு 5 துாய்மை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கும் குப்பையிலிருந்து தயாரிக்கும் உரம் இயற்கை விவசாயத்திற்கு (Organic Farming) மிகவும் பயன்படும் என்பதால் குறைந்த விலையில் விற்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக இத்திட்டத்தின் செயல்பாட்டை வைத்து, மீதமுள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களிலும் விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மக்காத குப்பைகளை சிமென்ட் தயாரிக்கும் ஆலையின் எரிபொருளாகவும், மறுசுழற்சிக்கு (Recycle) பயன்படும் பொருட்களை விற்கவும் ஊராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

மேலும் படிக்க

வேலூர் விஐடி வேளாண் கல்லூரியில், மாணவர்களுக்கு உலக தரத்தில் விவசாய பயிற்சி!

தரிசு நிலங்களை வளப்படுத்தி விவசாய பணிகளை அதிகரிக்க வேண்டும்! சிவகங்கை கலெக்டர் அறிவிப்பு!

English Summary: 7 villages selected to set up microbial fertilizer production centers! Published on: 25 June 2021, 07:55 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.