பலரும் விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தால், செய்யும் வேலைகளை விட்டு, விவசாயம் செய்யத் தொடங்குவதுண்டு. ஆனால், ஒருவர் தன்னுடைய வீட்டையே தோட்டமாக மாற்றியுள்ளார் எனச் சொன்னால் நம்புவீர்களா? உத்தரப் பிரதேச மாநிலம், பரேலில் வசித்து வரும் ராம்வீர் சிங் என்பவர் முழுநேர பத்திரிகையாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். 2009-ம் ஆண்டில் அவருடைய நண்பரின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ரசாயனம் கலந்த காய்கறிகளை உண்டது ஒரு காரணமாக இருக்கலாம் என்பதைக் கேட்டு அதிர்ந்துபோனார்.
இத்தகைய சூழலிலிருந்து, தன்னுடைய குடும்பத்தைக் காக்கத் தானே இயற்கை விவசாயத்தில் ஈடுபட முடிவு செய்தார். முதற்கட்டமாகத் தன்னுடைய வேலையை விட்டவர், பரேலியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன்னுடைய பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்யத் தீர்மானித்தார்.
விவசாய முயற்சிகளில் இருந்தபோதே 2018-ம் ஆண்டு துபாயில் விவசாயம் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ராம்வீருக்கு கிடைத்தது. அப்போது, ஹைட்ரோபோனிக்ஸ் விவசாய முறை குறித்து அறிந்துகொண்டார் ராம்வீர் சிங்.
அதாவது, ஹைட்ரோபோனிக்ஸ் என்பது ஒருவகை மண்ணில்லா விவசாய முறை. தண்ணீர் மற்றும் திரவ உரங்களைக்கொண்டே விவசாயம் செய்துவிட முடியும். ஒருமுறை அமைத்துவிட்டால் தொடர்ந்து அதிலிருந்து காய்கறிகளைப் பறிக்க முடியும் என்பதையும் அறிந்துகொள்கிறார். இதில் காய்கறி செடிகள், கீரைகள், மூலிகைத் தாவரங்கள் அனைத்தும் மண் இல்லாமல், நீர் சார்ந்த கனிம ஊட்டச்சத்து கரைசல் மட்டும் பயன்படுத்தும் முறை.
இந்த விவசாய முறை மூலம் ஈர்க்கப்பட்டவர், தன்னுடைய மூன்று அடுக்கு வீட்டையே தோட்டமாக மாற்ற முடிவு செய்தார். குறைந்த எண்ணிக்கையில் செடிகளை வைத்து தொடங்கியவர், செடிகளை வளர்க்கும் நுட்பத்தைக் கற்றுக்கொண்டு இப்போது `விம்பா ஆர்கானிக் மற்றும் ஹைட்ரோபோனிக்ஸ்’ என்ற பெயர் பெயரில் சுமார் 10,000 செடிகள் வரை வீட்டில் வளர்த்து வருகிறார். ஆனால், இதை அமைக்க ஆரம்பகட்ட முதலீடு அதிகம் என்றும் சொல்கிறார். பண வசதி இருப்பவர்கள் செலவு செய்து ஒருமுறை அமைத்துவிட்டால் பல ஆண்டுகளுக்கு பலன் தரும்.
மேலும் படிக்க:
Share your comments