விதை பெருக்கு திட்டத்தின் மூலம் நெல் விதை உற்பத்தி செய்யும் விதை பண்ணை விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் 75 சதவீத கொள்முதல் விலை வழங்கப்படும் என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை மூலம் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றம் பருத்தி பயிர்களுக்கான விதை பெருக்குத் திட்டம் மூலம் தரமான விதை உற்பத்தி செய்யும் விதை பண்ணை விவசாயிகளை ஊக்கப்படுத்த அவர்கள் உற்பத்தி செய்யும் அனைத்து விதைகளுக்கும் கொள்முதல் விலை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
விதைகளுக்கு கொள்முதல் விலை
அதன்படி, விவசாயிகள் உற்பத்தி செய்யும் விதைகளான நெல்லுக்கு ஆதார விதை சன்ன ரகங்களுக்கு 75 சதவீதமும், மத்திய ரகங்கள் மற்றும் இதர ரகங்களுக்கு 75 சதவீதமும் சான்று விதை சன்ன ரகங்களுக்கு 60 சதவீதமும், மத்திய ரகங்கள் மற்றும் இதர ரகங்களுக்கு 60 சதவீதமும் கொள்முதல் விதை வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு விதைப்பண்ணைக்கு தேவையான விதைகள் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகிக்கப்படும். விதைப் பண்ணையினை பராமரிப்பதற்காக களப்பணியாளர்கள் மற்றும் விதை சான்று அலுவலர்கள் அளிக்கும் வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். இது குறித்த தகவல்களை விவசாயிகள் பெற வேண்டுமானால் கிராம அளவில் வேளாண் உதவி அலுவலர்களையும், வட்டார அளவில் உதவி விதை அலுவலர், வேளாண்மை அலுவலரையும், மாவட்ட அளவில் துணை வேளாண்மை இயக்குனர்( தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை) தொடர்பு கொள்ளலாம் என்று வேளாண்மை துறை அலுவலகம் தெரிவித்துள்ளது
மேலும் படிக்க..
வட கிழக்கு பருவ மழை காலங்களில் தக்காளி விலை ரூ. 20 வரை உயர வாய்ப்பு - வேளாண் பல்கலை!!
இனி OTP இல்லாமல் LPG சிலிண்டர் கிடையாது - நவம்பர்-1லிருந்து விநியோக முறையில் மாற்றம்!!
Share your comments