இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் ஐ.டி.பி., திட்ட நிதியுதவியில், வெளிநாட்டில் கல்வி பயணமாக செல்ல தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தை சார்ந்த 80 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிலும் மூன்றாவது மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் 80 பேர், வெளிநாட்டில் கல்வி பயணமாக செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது-
வேளாண் பல்கலைக்கழகத்தின் 80 மாணவர்கள், 40 விஞ்ஞானிகள் துபாய், கனடா, தைவான், பிரிட்டன், இஸ்ரேல், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இந்தாண்டு செல்லவுள்ளனர். 'விசா' சார்ந்த சிக்கல் காரணமாக அமெரிக்கா செல்ல இந்தமுறை இயலவில்லை. அதிகமானோர் கனடா செல்கின்றனர். நெதர்லாந்தில் டிரோன் செயல்பாடுகள், இஸ்ரேல் நீர்நுட்ப மேலாண்மை மற்றும் விவசாயத்தில் ரோபோ பயன்பாடு என ஒவ்வொரு நாடுகளிலும் பல்வேறு புதிய தகவல்களை கற்றுக்கொள்ள மாணவர்கள் தயாராக உள்ளனர்.
2 மாதங்கள் அங்கு தங்கி படிக்கவுள்ள நிலையில் இது மாணவர்களின் மேற்படிப்பு, வேலைவாய்ப்பு என பலவற்றுக்கும் உதவியாக இருக்கும். மார்ச் 15 முதல் 25-க்குள் அனைவரும் வெளிநாடுகளுக்கு பயணிக்க திட்டமிட்ட உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: PM கிசான் 13வது தவணை நிலை அறிய வேண்டுமா?| விதைப்பண்ணை அமைக்க மானியம்| TNAU 2 நாள் பயிற்சி
விதைப் பண்ணை அமைக்க அரசின் மானியம் இதோ!
மாணவர்கள் இந்தியாவை போன்று வெளிநாடுகளில் விவசாயத்துறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள், நீர் மேலாண்மை, பயிர் மேலாண்மை, களையெடுப்பு, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு புதிய தகவல்களையும் அறியும் வகையில், இந்த வெளிநாட்டு கல்வி பயணம் என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை:
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரிகளில் நடப்பாண்டில் இளங்கலையில் காலியாக உள்ள 1400 இடங்களை நிரப்ப உடனடி மாணவர் சேர்க்கை வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஸ்பாட் அட்மிஷன் என்கிற முறையில் நடைபெற உள்ள இந்த உடனடி கலந்தாய்வில், பொதுகலந்தாய்வில் இடம் கிடைக்கபெற்று அதனை தவறவிட்டவர்கள், சான்றிதழ் சரிபார்பில் பங்கேற்காதவார்கள் மற்றும் புதிதாக கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு www.tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் காணலாம் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கையில் காலதாமதம் இருக்காது எனவும், ஜூலை 15 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிக்குள் வகுப்புகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க :
காட்டுப்பன்றியை வன விலங்குகள் பட்டியலில் இருந்து விலக்குக-விவசாயிகள் கோரிக்கை
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி எப்போது ? கைவிரித்த ஒன்றிய அரசு
Share your comments