வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பிரிட்டன் அரசு, பிரிட்டன் கவுன்சில் மற்றும் பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் 800அதிகமான உதவித்தொகையை வழங்கி வருகிறது.
கல்வி திட்டங்களின் வகைகள்
பிரிட்டன் பல்கலைக்கழகம் பல்வேறு வகையான பிரிவுகளில் பாட திட்டத்தை மாணவர்கள் எளிதில் அறியும் வண்ணம் வழங்கி வருகிறது. அவை, பொறியில், மருத்துவம், கலை, வணிக மேம்பாடு, சட்டம், மென் பொருள், சமூக அறிவியல் என பல பாட திட்டத்தை பாட வழங்குகிறது.
கல்வி உதவிதொகை
பிரிட்டன் அரசு, பிரிட்டன் கவுன்சில் மற்றும் பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் பல்வேறு உதவிதொகை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. இதனால் அங்கு பயிலும் இந்தியா மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்ட வருகிறது.
பெண்களுக்கு என்று தனி உதவித்தொகை. குறிப்பாக அறிவியல், தொழில் நுட்பம், பொறியில்,கணிதம் போன்ற பிரிவுகளின் கீழ் பயிலும் மாணவிகளுக்கு 9 கோடி ரூபாய் வரையிலான உதவிதொகையை இம்முறை அறிவித்துள்ளது.
பிற உதவித்தொகைகள்
Great Education Scholarship
Commonwealth Scholarship and Fellowship Plan (CSFP)
Chevening Scholarship
Hornby Educational Trust Scholarship
Charles Wallace India Trust Scholarship
Newton Bhabha International Fellowship
விசா பெரும் வழிமுறைகள்
இந்தியாவில் மொத்தம் 18 மையங்களில் விசாவானது வழங்கப்படுகிறது. மேலும் பிரிட்டன் அரசு, பிரிட்டன் கவுன்சில் மற்றும் பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் விண்ணப்பத்திற்கு வழிகாட்டுகின்றன.
விசா பெற தேவையானவை
-
பாஸ்போர்ட் விவரம், அண்மையில் எடுத்த புகைப்படம்
-
கல்வி வழங்கும் நிறுவனத்தின் ஒப்புதல் சான்று
-
ஐஎல்ட்ஸ் - ல் தேர்ச்சி பெற்ற படிவம். (ஆங்கில புலமை பற்றி அறிய)
-
வங்கி விவபரங்கள் மற்றும் அங்கு படிக்கும் காலங்களில் செலவு செய்வதற்கான நிதி நிலவரம் .
மேலும் தெரிந்து கொள்ள www.britishcouncil.in/programmes/higher-education முகவரியை அணுகலாம்
Share your comments