1. செய்திகள்

இரயில்வே துறையில் 91 ஆயிரம் பணியிடங்கள் இரத்து: வெளியானது அதிர்ச்சி தகவல்!

R. Balakrishnan
R. Balakrishnan
Railway

இரயில்வே உற்பத்தி பிரிவுகள், சக்கர என்ஜின் தொழிற்சாலைகள், ரயில்பெட்டி தொழிற்சாலைகளிலும் இந்த பணியிடங்கள் ரத்து செய்யப்படுகிறது. பாதுகாப்பு முக்கியத்துவம் இல்லாத பிரிவில் உள்ள மொத்த பணியிடங்கள் 4 லட்சத்து 52 ஆயிரத்து 825 ஆகும். இவற்றில் 91 ஆயிரத்து 649 பணியிடங்கள் காலியாக உள்ளன. ரயில்வேயில் மொத்தம் 91 ஆயிரம் பணியிடங்களை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், இந்த பணியிடங்களில் இனி புதிய நியமனங்கள் இருக்காது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், “புதிய வேலைகளை வழங்கும் திறன், மோடி அரசுக்கு இல்லை. ஆனால், இருக்கும் வேலைகளை பறிக்கும் திறன் நிச்சயமாக இருக்கிறது. உங்கள் அராஜக அதிகாரத்தை இளைஞர்கள் உடைத்தெறிவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களது எதிர்காலத்தை அழிப்பதற்கு இந்த அரசு பெரும் இழப்புகளை சந்திக்கும்” என கூறி உள்ளார்.

வேலையின்மை (Unemployment)

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூறுகையில், “வேலையில்லா திண்டாட்டம் 45 வருட சாதனையை முறியடித்துள்ளது. கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு நம்பிக்கை கொடுக்கப்பட்டது.

ஆனால் இப்போது ரயில்வேயில் 50 சதவீத வேலைவாய்ப்புகள் என்றைக்கும் இல்லாமல் போய்விட்டன. 91 ஆயிரத்து 629 பணியிடங்களில் இனி ஒரு போதும் நியமனங்கள் கிடையாது” என தெரிவித்துள்ளார்.

கிராமம் முதல் நகரம் வரை, ரயில்வேயிலும், ராணுவத்திலும் வேலை கிடைப்பதற்காக இளைஞர்கள் இரவு, பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மோடி அரசில் பணி நியமனங்களும், நம்பிக்கையும் முடிவுக்கு வந்துவிட்டது” என அவர் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் படிக்க

குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைத்தாள் வெளியீடு!

தமிழகத்தில் ஜூலை 1 முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

English Summary: 91 thousand jobs canceled in railway sector: Shocking information released! Published on: 29 May 2022, 09:12 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.