லாபம் என்ன பெரிய லாபம். ஒரு நாளைக்கு என்னிடம் மட்டும் 20 ஸ்கூல் பசங்க, சில காலேஜ் பசங்களும் வருவாங்க. ஸ்கூல் வாத்தியார், பிரின்சிபால், பஸ் டிரைவர், கன்டெக்டர்னு பல பேர் அவசர அவசரமாக வந்து வயிறு நிறைய சாப்பிட்டுப் போவாங்க.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சாயல்குடியில் பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் 40 வருடங்களாக இட்லிக்கடை நடத்தி வருகிறார் லிங்கேஸ்வரி என்னும் பாட்டி. இங்கு சாப்பிட நமக்கு 10 ரூபாய் இருந்தாலே போதும். வயிறு நிறைய சாப்பிட வேண்டுமானால் 20 ரூபாய் இருந்தாலே போதும். எப்படித் தெரியுமா? இந்த அம்மாச்சிக் கடையில் 4 இட்லி வெறும் 10 ரூபாய்தான். ஒரு தோசை 5 ரூபாய் மட்டுமே. இதனுடன் இரண்டு வகை சட்னி மற்றும் சாம்பார் தரப்படும். 40 வருடங்களாக ஒரே இடத்திலேயே குறைந்த விலையில் மட்டுமே இட்லிக்கடை நடத்திவரும் லிங்கேஸ்வரி பாட்டியிடம் பேசினோம்.
பாட்டி, ஒரே இடத்துல 40 வருஷம் எப்படிக் கடை நடத்துறீங்க?
எனக்கு 15 வயதிலேயே திருமணம் ஆயிடுச்சு. எனக்கு 18 வயசு இருக்கிறப்ப இதே இடத்தில ரெண்டு தோசைக்கல்லைப் போட்டு தோசையும் இட்லியும் விக்க ஆரம்பிச்சேன். இப்ப எனக்கு 58 வயசு. 40 வருஷம் எப்படிப் போச்சுன்னு தெரியல. ஆரம்பத்துல ஒரு இட்லியை எட்டணாவுக்கும் (50 பைசா) ஒரு தோசையை ஒரு ரூபாய்க்கும்தான் வித்துவந்தேன். இப்ப சில வருஷமாத்தான் 10 ரூபாய்க்கு 4 இட்லியும், ஒரு தோசை ஐந்து ரூபாய்க்கும் வித்து வர்றேன். 10 ரூபாய்க்கு ஸ்பெஷல் தோசை, 15 ரூபாய்க்கு முட்டை தோசையும் விக்கிறேன்.’’
நீங்கள் ஒரே ஆளாகத்தான் கடையைப் பார்த்துக்கிறீங்களா?
எனக்கு மொத்தம் மூணு பசங்க. நான் யாரையும் தொந்தரவு பண்றதில்ல. நான் மட்டும்தான் கடையைப் பார்த்துப்பேன். என் தங்கச்சி அப்பப்போ வந்து எனக்கு சில உதவியை செஞ்சுட்டுப் போவா. என் வீட்டுக்காரர் இருந்தவரை எனக்கு நன்றாக உதவி செஞ்சாரு. ஆனா, இரண்டு வருஷத்துக்கு முன்னால கொரோனாவுல அவரு எறந்துட்டாரு. அதுல இருந்து நான் மட்டுந்தான் கடையைப் பார்த்துக்கிறேன்.’’
எத்தனை மணி வரை உங்கள் கடை இருக்கும்?
காலைல 6 மணிக்கு கடையைத் தொறப்பேன், 11 மணி வரை நடக்கும். சாயங்காலம் 6 மணி முதல் 9 மணி வரை இருக்கும். ஞாயிற்றுகிழமைன்னா காலையில 9 மணி வரைக்கும் இருக்கும். திரும்பவும் சாயங்காலம் 6 மணிக்கு ஆரம்பிச்சு 9 மணி வரை இருக்கும்.’
மேலும் படிக்க:
உடல் எடை குறைவது தொடர்பான 4 பொய்கள்
காய்கறி தோட்ட திட்டத்தில் மானியத்தில் கிடைக்கிறது மாடித்தோட்ட ‘கிட்’
Share your comments