பிரதமர் தற்போதுபயன்படுத்தும் காருக்கு பதிலாக புதிய மின்சார காரை வாங்க பிரதமர் அலுவலகம் தற்போது திட்டமிட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே மத்தியில் ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எலெக்ட்ரிக் வாகனம்
இந்தியாவில், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக பிரதமருக்காக பயன்படுத்தப்படும் சொகுசு காருக்கு பதில் எலெக்ட்ரிக் கார் வாங்க பிரதமர் அலுவலகம் திட்டமிட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்
தற்போது, பிரதமர் மோடி, உலகில் அதிக பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களைப் பெற்றிருக்கும் மெர்சிடஸ் பென்ஸ் மேபேச் எஸ்650 (Mercedes Benz Maybach S650) காரை பயன்படுத்தி வருகிறார். இதற்கு முன்பாக பிரதமர் மோடி மிகவும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 200 சீரிஸ் மற்றும் பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட உயர்-பாதுகாப்பு ரேஞ்ச் ரோவர் வோக் ஆகியவற்றை பயன்படுத்திக் கொண்டிருந்தார்.
புதிய கார்
இந்நிலையில் தற்போது பிரதமரின் டிற்காக வாங்க புதிய காரை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அது என்னமாதிரியான பாதுகாப்பு சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் எந்த நிறுவனத்தைச் சேர்ந்த காராக இருக்கும் என எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது.அதுமட்டுமல்லாமல், தற்போது பயன்படுத்தி வரும் சொகுசு கார், விஆர்10 அளவிலான பாதுகாப்பை வழங்குவதற்கான சான்றிதழைப் பெற்றுள்ளது.அதாவது ஏகே 47 துப்பாக்கி தோட்டாக்கள் மூலம் 15 கிலோ டிஎன்டி குண்டு வெடிப்பைத் தாங்கும். இது தவிர விஷவாயு தாக்குதல், உயிரி ஆயுத தாக்குதல் உள்ளிட்டவைகளிலிருந்தும் இருந்தும் பாதுகாக்கும்.
மெர்சிடஸ் பென்ஸ் இகியூஎஸ்
பிரதமர் அலுவலகம் வாங்க இருக்கும் புதிய இவி காரில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.அதன்படி, மெர்சிடஸ் பென்ஸ் இகியூஎஸ் (Mercedes Benz EQS) தேர்வாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எலக்டிரிக் பிராண்டு இன்னும் வரவில்லை என்றாலும், விரைவில் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
உயர் சவாரி
இது EQS செடான் டைப் காராகும். அதுமட்டுமல்லாமல், உயர் சவாரி எஸ்யுவி பாடி ஸ்டைலில் தொகுக்கப்பட்ட S-வகுப்பு தர ஆடம்பர காராகும். பிரதமர் பயன்படுத்திய முந்தைய கார்களைப் விட அதிக தொழில்நுட்ப வசதிகளும், மேம்படுத்தப்பட்ட அம்சங்களும் இந்த காரில் இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது.
மேலும் படிக்க...
விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!
Share your comments