நியாய விலை கடைகளில் கருவிழி அடையாளம் மூலம் பொருட்கள் வழங்கும் திட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் 69-வது இந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, 1,262 பயனாளிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி கடனுதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ”தமிழகத்தில் இனி அமைக்கப்படும் நியாய விலைக்கடைகளில் கட்டாயம் கழிவறை அமைக்கப்படும் என்றார்.
நியாய விலை கடைக்கு வருவோர் காத்திருக்க வேண்டிய சூழலில், அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், ”கருவிழி அடையாளத்தை பயன்படுத்தி பொருட்கள் வழங்கும் திட்டம் சோதனை முறையில் துவங்கியுள்ளோம். விரைவில் அனைத்து நியாய விலை கடைகளிலும் இந்த முறை அமலுக்கு கொண்டுவரப்படும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் படிக்க:
Share your comments