1. செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வான் சாகசம் செய்த NRI பெண்!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit : Puthiyathalamurai

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் வானிலிருந்து ஸ்கை டைவ் செய்து ஆதரவை தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.

சாகசத்துடன் ஆதரவு

போராட்டத்தின் இடைஇடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையும் இழுபறியில் நீடித்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட பல்ஜித் கவுர் என்ற பெண், 15000 அடி உயரத்திலிருந்து ஸ்கைடைவ் செய்துள்ளார். இந்த ஸ்கைடைவிற்காக அவர் இந்திய பண மதிப்பில் ரூ.35000 செலவு செய்துள்ளார். 29 வயதான இவர் தனது முகக்கவசம் மற்றும் டிசர்ட்டில் விவசாயிகளுக்கு ஆதரவான வாசகங்களை பொறித்தபடி டைவ் செய்தார்.

 

விவசாயம் முக்கியம்

இதுகுறித்து பேசிய பல்ஜித் கவுர், தங்கள் குடும்பம் விவசாயக்குடும்பம் இல்லை என்றாலும், டெல்லி குளிரில் போராடும் வயதான விவசாயிகளுக்காக இவ்வாறு ஆதரவு தெரிவித்ததாக அவர் கூறினார். மேலும், கடந்த மூன்று மாதங்களாகவே அவர்கள் இந்த சட்டங்களுக்கு எதிராக போராடி வருவதையும், ஒரு மாதமாக டெல்லி எல்லையில் கடுங்குளிரில் போராடும் வீடியோக்களையும் பார்த்துவிட்டுத்தான் என்னால் இயன்ற இந்த எதிர்ப்பினை பதிவு செய்ததாக கூறினார்.

மேலும் படிக்க...

கூடுதல் கரும்புகளை எத்தனால் உற்பத்திக்காக எடுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

பொங்கலுக்கு இனிப்பு சேர்கும் வெல்லம்! தயாரிப்பு பணிகள் மும்முரம்!!

விவசாயிகள் போரட்டம் : மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!!

English Summary: A woman from the state of Punjab in Australia has expressed support by skydiving from the sky. Published on: 01 January 2021, 07:31 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.