தமிழ்நாட்டில் வீடு, கைத்தறி, விசைத்தறி மற்றும் விவசாய மின் இணைப்பை பெற்றிருக்கும் நுகர்வோர், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மாநில அரசு அறிவித்தது. இணைப்புப் பணிகள், நவம்பர் 15ம் தேதி தொடங்கின. 2, 800 குழுக்கள் அமைக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக கரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “தமிழகத்தில் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. மின் இணைப்புடன் ஆதாரை இதுவரை 2 கோடியே 66 லட்சம் பேர் இணைத்துள்ளனர். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள். கூடுதல் அவகாசம் வழங்கப்படாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், “ முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், மொத்தமுள்ள 2.67 கோடி வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி & விவசாய இணைப்புகளில் இன்று காலை 11.00 வரை 2.66 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.
இது 99.57% ஆகும். இதுவரை இணைத்திடாதவர்கள், கடைசி நாளான இன்று மாலைக்குள் விரைந்து இணைத்திட வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க:
கண் சார்ந்த நோய்களை குணப்படுத்த சூப்பரான 5 டிப்ஸ்!
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 ! ஜூன் 3ல் தொடங்க திட்டம்!
Share your comments